தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலம் அருகே ஓலைப்பாடி ஊராட்சியில் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.12.50 லட்சத்தில் புதிய ரேசன் கடையை பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா திறந்து வைத்து, பொதுமக்களுக்கு சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில், அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். இதில் ஓலைப்பாடி ஊராட்சி மன்றத் தலைவர் விஜி பிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.