districts

img

தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் ஊட்டச்சத்து வார விழா

திருச்சிராப்பள்ளி, செப்.8 - தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் தே‌சிய ஊட்டச்சத்து வாரம் செப்.1 முதல் 7 வரை கொண்டாடப்பட்டது.  ஆண்டு தோறும் தே‌சிய ஊட்டச்சத்து வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இவ்வாண்டும், கடந்த ஒரு வாரமாக பொதுமக்களுக்கு உணவுப்பழக்க வழக்கங்கள் மற்றும் உணவு கட்டுப்பாடு முறை குறித்த விழிப்புணர்வு முகாம் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இதில் நாளொன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். நிறைவு நாளில், பொதுமக்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு ஊட்டச்சத்து உணவு பற்றிய                   போட்டிகள் நடத்தப்பட்டன. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்திய உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவன இயக்குநர் டாக்டர் பழனிமுத்து, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி சிறப்புரை ஆற்றினார். மருத்துவமனையின் பொது மேலாளர் டாக்டர் பாலமுருகன் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் மணிவாசகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.