மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம், சின்னங்குடியில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை சார்பில் திருக்கடையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துடன் இணைந்த புதிய கிளை துவக்க நிகழ்ச்சி சின்னங்குடி ஊராட்சியில் நடைபெற்றது. புதிய கிளைக்கான அலுவலகத்தை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் திறந்து வைத்து உரையாற்றினார்.