districts

திருச்சி முக்கிய செய்திகள்

சிறைவாசியிடம்  போதை மாத்திரை பறிமுதல்

திருச்சிராப்பள்ளி, ஆக, 19, திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் விசாரணை சிறை வாசியாக நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் புலியூர்  சிங்கவலம் ரோடு பகுதியைச் சேர்ந்த குமார் (எ) சுகுமார்  (40) அடைக்கப்பட்டுள்ளார். இவர் வழக்கு விசாரணைக் காக தஞ்சாவூர் நீதிமன்றத்திற்கு சென்று வீட்டு மீண்டும்  சிறைக்கு திரும்பினார். அவரை சிறைக் காவலர்கள் சோதனை செய்தனர். அப்போது 13 போதை மாத்திரை களை அவர் கொண்டுவந்தது தெரியவந்தது. அவற்றை  சிறைக் காவலர்கள் பறிமுதல் செய்தனர்.  சிறைத்துறை புகாரின் பேரில் கே.கே.நகர் காவல்துறையினர், சுகுமார் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நகை-பணம் பறிப்பு

திருச்சிராப்பள்ளி, ஆக.19- மணப்பாறை பேருந்து நிலையத்தில் மயக்க மருந்து  நகை, பணத்தை பறித்துச் சென்றவர்களை தேடி வருகிறது காவல்துறை. கரூர் மாவட்டம் கடவூர் செம்பிநாதம் பதையூர் பகுதி யைச் சேர்ந்தவர் கன்னியப்பன் (51). இவர் திருச்சிராப் பள்ளியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் செல்வதற் காக மணப்பாறை பேருந்து நிலையம் வந்தார். பின்னர்  திருச்சிராப்பள்ளி பேருந்து நிற்கும் பகுதிக்குச் சென்றார்.  அப்போது அடையாளம் தெரியாத மூன்று பேர் கன்னி யப்பன் மீது மயக்க மருந்தை  தெளித்தனர். கன்னியப்பன் மயங்கிய நிலையில் அவரது கழுத்தில்  கிடந்த ஒரு பவுன் செயின், அரை பவுன் மோதிரம், ரூ.1000  பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு ஓடிவிட்டனர். மயக்கம் தெளிந்து பார்த்தபோது தான் அணிந்திருந்த  நகை மற்றும் பணம் திருட்டு போனதை அறிந்து அதிர்ச்சி  அடைந்த கன்னியப்பன் மணப்பாறை காவல்துறையில் புகார் செய்தார். விசாரணை நடைபெற்று வருகிறது.

பள்ளிகளில் மேலாண்மைக் குழுக் கூட்டம் 

தஞ்சாவூர், ஆக.19 -  தஞ்சாவூர் மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி,  தஞ்சாவூர் நகர வளமையத்திற்கு உட்பட்ட அரசு காது  கேளாதோருக்கான மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு  பார்வைத் திறன்  குறையுடையோருக்கான மேல்நிலைப் பள்ளிகளில் சனிக்கிழமை பள்ளி மேலாண்மைக் குழு மறு  கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.  பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பில் 1 முதல்  12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் பெற்றோர் கள் கலந்து கொண்டு, 20 நபர்கள் கொண்ட பள்ளி மேலாண் மைக் குழு அமைக்கப்பட்டது. இதில் உள்ளாட்சி பிரதிநிதியாக கே.மணிகண்டன்  கலந்து கொண்டார். பள்ளி மேலாண்மை குழு மறு கட்ட மைப்பின் பார்வையாளராக மாவட்ட உதவித் திட்ட அலு வலர் ஆர்.ரமேஷ் குமார், மாவட்ட உதவித் திட்ட அலுவலர்  (தொடக்க நிலை) எஸ். இராமலிங்கம், மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் ஆர்.சௌமிய நாராயணன், வட்டார வள மேற்பார்வையாளர் கே. ஜெனட் ஷோபா, ஆசிரியர் பயிற் றுநர்கள் ஆ.வேலுச்சாமி, த.செந்தமிழ்ச்செல்வி மற்றும்  பள்ளி மேலாண்மைக்குழு மாவட்டக் கருத்தாளர்கள்-ஆசிரியர்கள் பி.பூங்குழலி, எஸ்.ஜோதிலட்சுமி ஆகி யோர் கலந்து கொண்டனர். இரண்டு பள்ளிகளிலும், 141  பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.  பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பிற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள்  என்.சக்கர வர்த்தி, பி.சோபியா மாலதி ஆகியோர் செய்திருந்தனர்.

திருச்சியில் ரூ.65 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

திருச்சிராப்பள்ளி, ஆக.19- திருச்சிராப்பள்ளி விமானநிலையத்தில் ரூ.65 லட்சம்  மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.  திருச்சிராப்பள்ளி விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. இந்த  விமானத்தில் சரக்கு பெட்டிகளில் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.  இதனையடுத்து அந்த விமானம் வந்ததும் சுங்கத்துறை அதிகாரிகள் விமானத்தில் சரக்கு வைக்கப்பட்டு இருந்த  பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கி ருந்த  நான்கு பெட்டிகளை சந்தேகத்தின் பேரில் திறந்து  பார்த்ததில் தங்கம் இருந்தது தெரியவந்தது. இதனை யடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்தத் தங்கத்தை பறி முதல் செய்து மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அதி காரிகளிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து  பெட்டிக்கு சொந்தமான இரண்டு பயணி களையும் அதிகாரிகள் கைது செய்தனர் .தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. தங்கத்தின்  மதிப்பு சுமார் ரூ.65 லட்சம்  என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிளியனூரில் ஆரம்ப  சுகாதார நிலையம்  திறப்பு

மயிலாடுதுறை, ஆக.19-  மயிலாடுதுறை மாவட்டம் ,குத்தாலம் ஒன்றியம் ,கிளிய னூர் ஊராட்சியில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். கிளியனூர் ஊராட்சியில் ரூ.60 லட்சம் செலவில் புதிய  ஆரம்ப சுகாதார நிலைய நோயாளிகள் பிரிவின் புதிய கட்டி டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  திறந்து வைத்தார். நிகழ்வில் மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் இராமலிங்கம் ,மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி,  சட்ட மன்ற உறுப்பினர்கள் நிவேதா முருகன் (பூம்புகார்), ராஜ் குமார் (மயிலாடுதுறை) எம்.பன்னீர்செல்வம் (சீர்காழி), மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் உமா மகேஸ்வரி, ஒன்றியக் குழுத் தலைவர் மகேந்திரன்  உள்ளிட்ட அரசு  அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

காலமானார்

திருவாரூர், ஆக.19- திருவாரூர் நேதாஜி சாலையில் அமைந்துள்ள நடராஜ்  மெஸ் உரிமையாளர் தோழர் பி.நடராஜன் (64) சனிக்கிழமை  காலை மாரடைப்பு காரணமாக காலமானார். அன்னாரது  மறைவுச் செய்தியறிந்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மூத்த உறுப்பினர்கள் எஸ்.ராமசாமி, எஸ்.கிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் ஜி.சுந்திரமூர்த்தி,  மாவட்டசெயற்குழு உறுப்பினர் எம்.கலைமணி, மாவட்டக்  குழு உறுப்பினர்கள் எஸ்.தம்புசாமி, ஜி.பழனிவேல், நகர்  செயலாளர் எம்.தர்மலிங்கம் உள்ளிட்ட பலர் மாலையணி வித்து அஞ்சலி செலுத்தினர். இறுதி நிகழ்ச்சி சனிக்கிழமை  மாலை நடைபெற்றது.

பயிர் சாகுபடியில் துத்தநாக ஊட்டச்சத்தின் முக்கியத்துவம்

தஞ்சாவூர், ஆக.19 -  பயிர் சாகுபடியில் துத்தநாக ஊட்டச்சத்தின்  முக்கியத்துவம் மற்றும் மேலாண்மை குறித்து வேளாண் துறை விளக்கம் அளித்து உள்ளது.  இதுகுறித்து, பட்டுக்கோட்டை வட்டார வேளாண் உதவி  இயக்குநர் ச.மாலதி வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பயிர்களில் துத்தநாக குறைபாடு இருக்குமெனில், நோய் மற்றும் பூச்சி தாக்குதல் அதிகமாகி  விளைபொருள்களின் தரம்பாதிக்கப்பட்டு  மகசூல்  இழப்பும் ஏற்படுகிறது. பயிரில் துத்த நாக பற்றாக்குறையால் பழைய இலைகளின்  நரம்பிடைப் பகுதிகளின் வெளியே பச்சை  மஞ்சள் அல்லது வெளுத்த புள்ளிகளும் காணப்படும். வெளிவரும் புதிய இலைகள் அளவில் சிறுத்துக் காணப்படுகிறது. கடுமையான குறைபாட்டின் போது இலைகளின் தூரம் மிகவும் குறைந்து அனைத்து இலைகளும் சிறுத்து ஒரே புள்ளியில் இருந்து வெளி யேறுவது போல் தென்படும்.  பயிர்களில் துத்தநாக பற்றாக்குறையை  நிவர்த்தி செய்ய  அடியுரமாக ஒரு ஏக்கருக்கு  பத்து கிலோ துத்தநாகசல்பேட்டை இருபது  கிலோ மணல் அல்லது தொழு  உரத்துடன் கலந்து இட வேண்டும். பயிரின் வளர்ச்சி பரு வத்தில் அறிகுறி தென்பட்டால் 0.5 சதவீதம்  (ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஐந்து கிராம் துத்த நாக சல்பேட்)  துத்தநாக சல்பேட்டை  கரை சலை இலைவழியாகத் தெளிக்க வேண்டும்.  பத்து முதல் 15 நாள் இடைவெளியில் பற்றாக்குறை அறிகுறி மறையும் வரையில்  தெளிக்க வேண்டும்.  உவர், களர் மற்றும் அமிலம் மண்ணாக இருந்தால் 15 கிலோ கிராம் துத்தநாக சல்பேட் அடியுரமாக இட வேண்டும். இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயிகள் அதிகமான மகசூல் பெற்று பயன் பெறலாம்” என  கூறப்பட்டுள்ளது.

பாபநாசம் ரயில் நிலையத்தை சுத்தப்படுத்திய மாணவர்கள்

பாபநாசம், ஆக. 19- தஞ்சாவூர் மாவட்டம்பாபநாசம் ரயில் பயணிகள் சங்கம்- பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல் நிலைப் பள்ளி என்.சி.சி மாணவர்கள் இணைந்து பாபநாசம் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணி மேற்கொண்டனர். பாபநாசம் ரயில் நிலைய நடைமேடை, தண்டவாளத்தை ஒட்டியப் பகுதிகளில் கிடந்த  பிளாஸ்டிக் கவர் உள்ளிட்டவற்றை அகற்றினர். ரயில் பயணிகள் சங்கச் செயலாளர் சரவணன், பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்.சி.சி அலுவலர் சரவணன் உட்பட பங்கேற்றனர்.

புதை உயிரிப்படிவ அருங்காட்சியகத்தை ஆய்வு செய்த அரியலூர் ஆட்சியர்

அரியலூர், ஆக.19- புதை உயிரிப்படிவ அருங்காட்சிய கத்தில் தேவையான வசதிகளை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது.   அரியலூர் மாவட்டம், ஆதிகாலத்தில் கடல் பகுதியாக இருந்ததால் இப்பகுதிகளில் டை னோசர் உள்ளிட்ட உயிரினங்கள் வாழ்ந்ததற் கான தொல்லியல் படிமங்கள் பல்வேறு இடங் களில் காணப்படுகின்றன.  அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில்  கிடைக்கப்பெற்ற தொல்லியல் படிமங் கள், புதைப்படிவ பொருட்கள் உள்ளிட்டவை களை மக்கள் காணும் வகையில் வாரண வாசி கிராமத்தில் புதை உயிரிப்படிவ அருங் காட்சியகம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.  இந்த அருங்காட்சியகத்தில் டைனோசர் முட்டை, கனிம தாது, புதைப்படிவ பொருட் கள் உள்ளிட்ட பல்வேறு வகையான அரிய  பொருட்கள் பாதுகாக்கப்பட்டு காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.  இந்த அருங்காட்சியகத்தை தினமும் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள், பள்ளி,  கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பார்வையிட்டு வரு கின்றனர்.  அந்த வகையில் வாரணவாசி புதை உயிரிப்படிவ அருங்காட்சியகத்தை மாவட்ட  ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா பார்வை யிட்டார். அவர், அருங்காட்சியகம் தொடர் பான பல்வேறு தகவல்கள் அடங்கிய குறும் படம் திரையிட்டு காட்டப்பட்டதையும் பார்வையிட்டார்.  இதேபோன்று அருங்காட்சியகத்தை பார்வையிட வருபவர்களுக்கு தேவையான வசதிகளை தொடர்ந்து ஏற்படுத்தித் தர வேண்டும். அருங்காட்சியகத்தை தொடர்ந்து  நல்ல முறையில் பராமரிக்கவேண்டும் அறி வுறுத்தியதுடன், அருங்காட்சியகத்திற்கு தேவைப்படும் கூடுதல் வசதிகள் குறித்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா கேட்டறிந்தார்.

திருமக்கோட்டை  மின் உற்பத்தி  நிலையத்தை இயக்கக் கோரிக்கை

மன்னார்குடி, ஆ.19- திருமக்கோட்டை எரிவாயு  சுழலி மின் உற்பத்தி நிலை யத்தை  மீண்டும் இயக்க வேண்டுமென தமிழ்நாடு மின் வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தி யுள்ளது.  இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற கூட்டத் திற்கு  எல்.பன்னீர் செல்வம்  தலைமை வகித்தார்.  பொறி யாளர் சங்க தஞ்சாவூர் மண்ட லச் செயலாளர் சா.சம்பத், தொமுச கோட்டச் செயலாளர் சு.காளிதாஸ், எம்ப்ளாயீஸ் பெடரேஷன் கோட்டத் தலை வர் கே.ராஜேந்திரன், சிஐடியு பொறுப்பாளர் அ.செல்வனா தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.   கூட்டத்தில் பொது மக்கள் நலன் கருதி நிறுத்தப்பட்ட மின்  உற்பத்தி நிலையத்தை மீண்டும் இயக்க வேண்டும்.  பணிபுரியும் தொழிலாளர்க ளின் விருப்பத்தின் அடிப்ப டையில் மாறுதல் வழங்க வேண்டும். ஒப்பந்தத் தொழி லாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுமென வலி யுறுத்தப்பட்டது.

தென்னங்கன்று வழங்கல்

நாகப்பட்டினம், ஆக.19- நாகப்பட்டினம் மாவட்டம்  வேதாரண்யத்தை அடுத்துள்ள மணக்குடியில் காங்கிரஸ் கட்சி யினர்  ராகுல்காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு லட்சம்  தென்னைகன்றுகள் வழங்கும்  திட்டம் ஞாயிறன்று தொடங்கி யது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி யின் விவசாயப் பிரிவு பொதுச்  செயலாளர் சுர்ஜீத் சங்கர் தென் னங்கன்றுகளை மக்களுக்கு வழங்கினார். மேலும் விவசாயி களுக்கும், விவசாயத் தொழி லாளர்களுக்கும் சாகுபடி இல்லாத காலத்தில் குடும்பத் திற்கு பத்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டுமென அவர்  தமிழக முதல்வரை வலியுறுத்தி  னார்.

மதிப்பெண் சான்றிதழ் வழங்கல்

அரியலூர், ஆக.19- அரியலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு அசல் மதிப் பெண் சான்றிதழ்கள் மாணவ,  மாணவிகளிடம்  வழங்கப்பட்டன. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை அரியலூர் மாவட்டத் தில் 9,997 மாணவ, மாணவி கள் எழுதினர். கடந்த மே 19- ஆம் தேதி பொதுத் தேர்வு முடிவு கள் வெளியாகின. ஏற்கெ னவே, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை அனைத்து அரசு மற்றும் தனி யார் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் அசல் மதிப் பெண் சான்றிதழ்கள் வழங்கப் பட்டன.

ஆக.29 குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

நாகர்கோவில், ஆக. 19- ஓணம் பண்டிகையையொட்டி கன்னியாகுமரி மாவட்டத் தில் ஆக.29 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘‘குமரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 29 அன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு, அரசு  அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆக.29 அன்று அறிவிக்கப் பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக செப்டம்பர்  மாதம் நான்காவது சனிக் கிழமை (23.09.2023) அன்று கன்னி யாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு  அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை  நாளாக இருக்கும். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஓணம் பண்டிகை தினத்திற்கு உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச் சட்டம் 1881-இன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் 29.8.2023 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக்  கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு,  தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும்’’ எனக்  கூறப்பட்டுள்ளது.

அகஸ்தியர் அருவிக்கு  செல்ல 2 நாட்கள் தடை 

திருநெல்வேலி, ஆக.19- நெல்லை மாவட்டம் பாபநாசம் காரையாறு சொரி முத்து அய்யனார் கோவில் ஆடித்திருவிழாவின் அனைத்து நாட்களிலும் அனைத்து அரசு துறைகளுக்கும் சிறப்பான ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்கள் அனை வருக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றி.  கோவிலில் இருந்து பக்தர்கள் கீழே இறங்குவதற்காக அரசு மற்றும் தனியார் வாகனங்கள் வெள்ளிக்கிழமை முதல் அனுமதிக்கப்பட்டு பொதுமக்கள் கீழே இறங்கி  வருகிறார்கள். சனிக்கிழமை முதல் நாள் திங்கட்கிழமை வரை 3 நாட்களும் தூய்மைப் பணி காரணமாக பாபநாசம்  அகஸ்தியர் அருவி மற்றும் கோவிலுக்கு பொதுமக்கள் யாருக்கும் அனுமதி இல்லை.  தூய்மைப் பணிக்காக செல்லும் வாகனங்கள் தவிர்த்து எவ்வித அரசு பேருந்துகளோ, தனியார் வாக னங்களோ செல்ல அனுமதி இல்லை. இந்த 3 நாட்களுக்கு  பாபநாசம் சோதனை சாவடி மூடப்படுகிறது. பொது மக்கள் ஆகஸ்ட் 22 (செவ்வாய்க்கிழமை) முதல் வழக்கம்  போல் கோவிலுக்கு சென்று வரலாம் என நெல்லை ஆட்சி யர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

தரமான விதைகள் மூலம் அதிக நெல்:  விவசாயிகளுக்கு விதை அலுவலர் வேண்டுகோள்

தஞ்சாவூர், ஆக.19 -  தஞ்சாவூர் விதைப் பரிசோதனை அலுவலர் குப்புசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,  சம்பா பருவம் ஆகஸ்ட் மாதத்தி லும், தாளடி பருவம் செப்டம்பர் மாதத்தி லும் தொடங்கவுள்ள நிலையில், தஞ்சா வூர் மாவட்டத்திற்கு ஏற்ற நீண்ட கால  ரகங்களான சி.ஆர்.1009, சப்1 சாவித்ரி  (சி.ஆர்.1009), ஆடுதுறை 51, தாளடி பரு வத்துக்கு ஏற்ற மத்திய கால ரகங்க ளான ஆடுதுறை 38, ஆடுதுறை 39,  ஆடுதுறை 46, ஆடுதுறை 54, ஆடுதுறை  56, கோ (ஆர்) 50, திருச்சி 3, திருச்சி  4, ஐஆர் 20, டிகேஎம்.13, மேம்படுத்தப் பட்ட வெள்ளை பொன்னி ஆகிய ரகங்க ளின் தரமான விதைகளை தேர்வு செய்து  விதைப்பது அவசியமாகும்.   பருவத்துக்கு ஏற்ற நெல் பயிரில்  ரகங்களை தேர்வு செய்து விதைக்கும் விவசாயிகள்  ரகங்களின் தரங்களை அறிந்து விதைப்பது மிகவும் அவசியம்.  தரமான அதிக முளைப்புத் திறனு டைய விதைகளை விதைப் பரிசோ தனை செய்து விதைப்பு மேற்கொண் டால் உயர் விளைச்சல் பெறலாம்.  விதையின் ஈரப்பதத்தை பொறுத்த வரை அதிகபட்சமாக 13 விழுக்காடு இருக்க வேண்டும். பிற ரகக் கலவைப்  பொறுத்தமட்டில் சான்று நிலை விதை களுக்கு 0.20 விழுக்காட்டுக்குள்ளும், ஆதார நிலை விதைகளுக்கு 0.05 விழுக் காட்டுக்குள்ளும் இருக்கவேண்டும்.  தஞ்சாவவூர் மாவட்டத்தில் உள்ள  விதை உற்பத்தியாளர்கள், விதை விநி யோகம் செய்பவர்கள், விதை விற்ப னையாளர்கள் மற்றும் விவசாயிகள் விதைகளில் புறத்தூய்மை, ஈரப்பதம், முளைப்புத் திறன் மற்றும் பிற ரக விதைக் கலப்பு ஆகியவற்றை மிகத் துல்லியமாக அறிந்து கொள்ள விதை  பரிசோதனை நிலையத்தில் விதையை பரிசோதனை செய்து கொள்ளலாம்.  விதை பரிசோதனை மேற்கொள்ள  100 கிராம் நெல் விதை மாதிரியுடன் ஒரு  மாதிரிக்கு ரூ.80 கட்டணம் செலுத்தி, தஞ்சாவூர் விதை பரிசோதனை நிலை யத்தை அணுகி பயன்பெறலாம்” எனக்  கூறப்பட்டுள்ளது.