தஞ்சாவூர், அக்.5 - தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே, தம்பிக்கோட்டை வடகாடு கிராமத்தில், தனிநபர் ஒரு வர் தனது வயலில் சிலிக் கான் தாது மணல் எடுப்பதற் காக அரசிடம் கடந்த 2021 ஆம் ஆண்டு அனுமதி பெற் றுள்ளார். இதற்காக வெறும் 11 ஏக்கரில், சுமார் 26 அடி ஆழத்திற்கு மட்டுமே மணல் எடுப்பதாக அனுமதி பெற் றுள்ளார். இந்த அனுமதியை வைத் துக்கொண்டு மணலை மலை போல அள்ளத் துவங் கியுள்ளார். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித் ததால், பணிகளை தொடரா மல் நிறுத்தி வைக்கப்பட்டி ருந்தது. இது தொடர்பாக கிராம மக்கள், சிலிக்கான் மணல் குவாரிக்கான அனு மதியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியர், கனிம வளத்துறை அதிகாரிகள் என பலரிடம் மனு அளித்தனர். இந்நிலையில், வெள்ளிக் கிழமை நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாது காப்புடன் மீண்டும் மணல் எடுப்பதற்கான பணியை துவங்க ஜே.சி.பி., இயந் திரம், டிராக்டர்களுடன் ஆட்கள் வந்தனர். இதனால் தம்பிக்கோட்டை கீழக்காடு, தம்பிக்கோட்டை வடகாடு, மறவக்காடு உள்ளிட்ட கிரா மத்தைச் சேர்ந்த பெண்கள் உட்பட சுமார் 700-க்கும் மேற்பட்டோர், மணல் எடுக் கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என வலி யுறுத்தி, வெள்ளிக்கிழமை தோப்பு மாரியம்மன் கோ வில் பகுதியில் போராட்டத் தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை வட்டாட்சியர் சுகுமாறன், கனிம வளத்துறை உதவி இயக்குநர் சீனிவாசராவ் உள்ளிட்ட அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி னர். இதில் அக்.16 அன்று பட்டுக்கோட்டை வட்டாட் சியர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை கூட்டம் நடத்தப் படும். அதுவரை மணல் அள்ளப்படாது என உறுதி யளித்தனர். அதன்பேரில், கிராம மக்கள் போராட்டத்தை கை விட்டு சென்றனர். போராட் டம் காரணமாக பட்டுக் கோட்டை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமை யில் ஏராளமான காவல்து றையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தம்பிக் கோட்டை கீழக்காடு கிராம வளர்ச்சி சங்க தலைவர் அ.மகாராஜன் கூறுகையில், “எங்கள் கிராமங்களைச் சுற்றி சுமார் 20-க்கும் மேற் பட்ட கிராமங்கள் கடலில் இருந்து குறைவான தூரத் தில் உள்ளன. மணல் எடுப் பதற்காக 40 ஏக்கர் நிலத்தில் 11 ஏக்கரில் மட்டுமே மணல் அள்ளுவதாக அனுமதி பெற்றுள்ளனர். இதற்கு பொதுமக்களின் கருத்து களை கேட்க வேண்டாம் என்ற விதியை காரணம் காட்டியுள்ளனர். 26 அடி ஆழத் திற்கு மணல் எடுத்தால், குடி நீர் உப்பு நீராக மாறி விடும். தென்னை, பனை, நெல் விவ சாயம் எல்லாம் முற்றிலும் நாசமாகி விடும். இதற்கு அரசு தீர்வு காண வேண் டும்” என்றார்.