கும்பகோணம், செப்.26- கும்பகோணத்தில் நடை பெற்ற விழாவில் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்களை தமிழக இளைஞர் நலன்- விளை யாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 ஊராட்சிகளுக்கு 736 கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பை யும். முதலமைச்சர் கோப்பை 2024 போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படுகிறது என்றார் இதனையடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் காணொலிக் காட்சி வாயிலாக புதுக்கோட்டை, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு கலைஞர் விளையாட்டு உபகர ணங்கள் தொகுப்பை வழங்கிடும் பணிகளை தொடங்கி வைத்தார். விழாவில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுற்றுச் சூழல் -கால நிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்ய நாதன், அரசு தலைமைக் கொறடா கோ.வி. செழி யன், மாவட்ட ஆட்சியர் பிரி யங்கா பங்கஜம், திமுக வடக்கு மாவட்ட செயலாள ரும் மாநிலங்களவை உறுப்பினருமான சு.கல் யாணசுந்தரம் சட்டமன்ற உறுப்பினர்கள் எம். கும்ப கோணம் தொகுதி அன்பழ கன், பாபநாசம் தொகுதி ஜவாஹிருல்லா, திருவை யாறு தொகுதி சந்திரசேக ரன், தஞ்சை தொகுதி டிகேஜி.நீலமேகம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பள்ளி கல்லூரி மாணவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.