districts

ஜூன் 18-இல் முதல்வருக்கு பாராட்டு விழா அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார் அமைச்சர் எஸ்.ரகுபதி தகவல்

புதுக்கோட்டை,  ஜூன் 11-  

     தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வரும் ஜூன் 18 அன்று நடைபெறும் பாராட்டு விழாவில் விளை யாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங் கேற்பார் என்றார் சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி.

    ஜல்லிக்கட்டுக்கு எதிரான உச்ச நீதிமன்ற வழக்கில் தமிழ்நாடு அரசின் சார்பில் தீவிர கவனம் செலுத்தி, ‘தடையில்லை’ என்ற தீர்ப்பைப் பெற்றுத்  தந்த முதல்வர் மு.க.ஸ்டா லினுக்கு புதுக்கோட்டையில் ஜூன் 5-ஆம் தேதி பாராட்டு விழா நடத்த  ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக செய்யப் பட்டன. முதல்வரின் வருகை தேதி தள்ளிப்போனதைத் தொடர்ந்து அந்தப் பாராட்டு விழா எப்போது நடை பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

   இந்த நிலையில், புதுக் கோட்டையில் செய்தியாளர் களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, ஜூன் 18-ஆம் தேதி பாராட்டு விழா நடைபெறும். விளை யாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்றும் தெரிவித்தார்.