ஓசூர் வாசவி நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் வரம் மருத்துவமனையின் மருத்துவ முகாம் நடைபெற்றது. சிபிஎம் மாநகர செயலாளரும் குடியிருப்போர் நல சங்க தலைவருமான சி.பி. ஜெயராமன்,செயலாளர் ஆனந்தகுமார் தலைமை தாங்கினர். மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா முகாமை துவக்கி வைத்தனர். வரம் மருத்துவமனை நிறுவனர் ராமமூர்த்தி இயக்குநர் மருத்துவர் பிரியதர்ஷினி,மருத்துவர்கள் சிபி,கிரி கலந்துகொண்டு இங்குள்ள 300 குடும்பத்தினருக்கு ரத்தம், நீரிழிவுநோய்,ரத்த அழுத்தம், பரிசோதித்தனர்.