districts

img

திமுக கூட்டணியின் தஞ்சை, கரூர், மயிலாடுதுறை தொகுதி வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல்

மயிலாடுதுறை,  மார்ச் 27 - இந்தியா கூட்டணி சார்பில் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ்  வேட்பாளர் ஆர்.சுதா புதனன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.  காங்கிரஸ் கட்சியின் மாநில மகளிரணி தலைவியும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான ஆர்.சுதா மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஏ.பி.மகாபாரதியிடம் வேட்புமனுவை அளித்தார்.  வேட்புமனு தாக்கலின்போது, அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், கல்யாணசுந்தரம் எம்.பி., பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் மாவட்டத் தலைவருமான எஸ்.ராஜகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.  முன்னதாக இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்களை சந்தித்து காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதா வாழ்த்துப் பெற்று, இருசக்கர வாகனத்தில் கூட்டணி கட்சியினருடன் பேரணியாக வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “மோடி ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களும் வன்முறைகளும் அதிகரித்துள்ளன. விவசாயம் கேள்விக்குறியாகிவிட்டது. பெரும் தொழிற்சாலைகள் மட்டுமல்லாமல் சிறு, குறு தொழில் செய்பவர்கள், சாலையோரங்களில் கடை நடத்துபவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  இப்படிப்பட்ட சூழலில் மாபெரும் யுத்தத்தை ஜனநாயக ரீதியாக எதிர்கொண்டுள்ளோம். ஜனநாயகத்தை மீட்டெடுக்கவும், பெண்கள், குழந்தைகள், விவசாயத்தைப் பாதுகாப்பதே இந்த யுத்தத்தின் முதல் கடமையாக இருக்கும்” என்றார்.

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எஸ்.ஜோதிமணி போட்டியிடுகிறார். அவர் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலர் தங்கவேலிடம் தனது வேட்புமனுவை புதன்கிழமை தாக்கல் செய்தார்‌. அமைச்சர்கள் சக்கரபாணி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கரூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் எம்.எம்.அப்துல்லா எம்.பி. ஆகியோர் உடனிருந்தனர்.

தஞ்சாவூர், மார்ச் 27- தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி  திமுக வேட்பாளர் ச.முரசொலி புதன் கிழமை தனது வேட்பு மனுவை மாவட்ட  தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியரு மான தீபக் ஜேக்கப்பிடம் தாக்கல் செய்தார். முன்னதாக, தஞ்சாவூர் அறிவால யத்தில் பேரறிஞர் அண்ணா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகி யோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து  ஆதரவாளர்களுடன் பேரணியாக புறப் பட்டு, தஞ்சை பழைய பேருந்து நிலையம்  அருகில் உள்ள பெரியார், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்தார். அங்கிருந்து பேரணியாக புறப்பட்டு தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தை வந்த டைந்தார். பின்னர் மாவட்ட தேர்தல் அலு வலரும் மாவட்ட ஆட்சியருமான தீபக் ஜேக்கப்பிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.  அப்போது எம்.பி., எஸ்.எஸ்.பழநி மாணிக்கம், காங்கிரஸ் தெற்கு மாவட்டத் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், இந்திய கம்யூனிஸ்ட் வடக்கு மாவட்டச் செயலாளர் பாரதி, விடுதலை சிறுத்தை கள் கட்சி மத்திய மாவட்டச் செயலாளர் ஜெய்சங்கர் ஆகியோர் அவருக்கு முன் மொழிந்தனர். வேட்பாளர் முரசொலியுடன் திமுக  மத்திய மாவட்ட செயலாளரும், திருவை யாறு எம்எல்ஏவுமான துரை.சந்திரசேக ரன், திமுக தலைமை செயற்குழு உறுப்பி னரும் தஞ்சாவூர் எம்எல்ஏவுமான டி.கே.ஜி.  நீலமேகம், எம்எல்ஏக்கள் பட்டுக்கோட்டை  அண்ணாதுரை, பேராவூரணி அசோக்குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

;