districts

img

மயிலாடுதுறை புத்தகத் திருவிழா நிறைவு

மயிலாடுதுறை, அக்.22 - மயிலாடுதுறையில் நடைபெற்ற புத்தகத் திருவிழா வில் “வால்காவிலிருந்து கங்கை வரை” என்ற  நாவல்  அதிகளவில் விற்பனையாகியுள்ளது என மயிலாடு துறை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.      மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்திய புத்தகத் திருவிழா, மயி லாடுதுறை திருவிழந்தூர் ஏ.வி.சி. திருமணக் கூடத்தில்  நடைபெற்றது. அக்.10 முதல் அக்.20 வரை 11 நாட்கள் நடைபெற்ற புத்தகத் திருவிழா வியாழனன்று நிறை வடைந்தது.  60-க்கும் மேற்பட்ட அரங்குகளுடன் பிரம்மாண்ட மாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தகத் திருவிழா வில், சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் புத்தகங் ளை பார்வையிட்டுச் சென்றுள்ளதாகவும், ரூ.75 லட்சம் மதிப்பிலான சுமார் ஒரு லட்சம் புத்தகங்கள் விற்பனை யாகி இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. கல்கி எழுதிய நாவல்கள் நல்ல வரவேற்பை பெற்றன. “வால்காவிலிருந்து கங்கை வரை” என்ற நாவல் அதிக பிரதிகள் விற்பனையானது. பள்ளி மாண வர்கள் அதிக அளவில் கலந்துகொண்டு, குழந்தைகளுக் கான புத்தகங்களை வாங்கிச் சென்றுள்ளனர். வியா ழனன்று நிறைவு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏ.வி.சி கல்லூரி நிர்வாக அதிகாரி யும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான வெங்கட்ராமன்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா, மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருகதாஸ், கோட்டாட் சியர்கள் வ.யுரேகா (மயிலாடுதுறை), உ.அர்ச்சனா (சீர்காழி), காவல் துணை கண்காணிப்பாளர் எம்.வசந்த ராஜ் உள்ளிட்டோர் பல்வேறு போட்டிகளில் வென்றவர் களுக்கு பரிசுகளை வழங்கினர்.

;