districts

img

வெறுப்பு அரசியலை தோற்கடிப்போம்! பூதலூரில் மாதர் சங்கம் பிரச்சாரம்

தஞ்சாவூர், பிப்.18 -  வெறுப்பு அரசியலை தோற்கடிப்போம், பெண்களின் ஜனநாயக உரிமைகளை பாது காப்போம் என வலியுறுத்தி, அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தஞ்சாவூர்  மாவட்டம் பூதலூர் தெற்கு ஒன்றியம் சார்பில்,  பூதலூர் நான்கு ரோட்டில் தெருமுனை பிரச் சாரக் கூட்டம் சனிக்கிழமை மாலை நடை பெற்றது.  மாதர் சங்க ஒன்றியத் தலைவர் என். வசந்தா தலைமை வகித்தார். மாதர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநி லச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி, மாநிலக்  குழு உறுப்பினர் எஸ்.கலைச்செல்வி. ஒன்றி யச் செயலாளர் வி.அஞ்சலிதேவி ஆகி யோர் பேசினர். இதில், “நூறு நாள் வேலையை 200 நாட் களாக உயர்த்தி, கூலியை ரூ.650 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும். பூதலூர் பகுதியை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டது.