districts

img

ஓய்வூதியம் பெறும் வயதை 70 ஆக குறைத்திடுக! அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, மே 17 - புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ செலவை திரும்பப் பெற அளிக்கப்பட்ட மனுக்களில் பல்வேறு நிலைகளில் மாவட்ட, மாநில எம்பவர்டு கமிட்டி, அரசு மாநில கமிட்டிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவை நிலுவையில் உள்ளன. இவைகளை தமிழக அரசு உடனே தீர்த்து வைக்க வேண்டும். தமிழக முதல்வர் சட்டமன்ற தேர்தலின் போது ஓய்வூதியர்கள், அரசு ஊழியர்கள் குறித்து  கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை உடனே நிறை வேற்ற வேண்டும். தமிழக அரசால் தற்போது வழங்கப்பட்டு வரும் கூடுதல் ஓய்வூதியம் பெறும் தகுதியான வயதை 80 லிருந்து 70 ஆக குறைக்க  வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள், வனத்துறை காவலர்கள் மற்றும் ஊராட்சி எழுத்தர்கள் உள்ளிட்ட அனை வருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7850 வழங்க வேண்டும். 1.4.2003 முதல் புதிய ஓய்வூதிய திட்டத் தின்கீழ் பணியமர்த்தப்பட்ட அனைவரையும் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும். 1.1.2022 முதல் வழங்கப்பட வேண்டிய  3 சதவீத அகவிலைப்படியை உடனே வழங்க  வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து  துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் செவ்வாயன்று  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்டத் தலைவர் செந்தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநில செய லாளர் நாதன், கூட்டமைப்பு மாவட்ட தலைவர் சிரா ஜூதீன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு  பெற்றோர் நல அமைப்பு மாவட்ட தலைவர் சின்ன சாமி, தமிழ்நாடு ஓய்வு பெற்ற மின் ஊழியர் நல  அமைப்பு மாநில துணைத் தலைவர் பஷீர் ஆகி யோர் பேசினர். 

திருவாரூர்
தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதி யர் சங்கத்தின் சார்பில் திருவாரூர் புதிய ரயில் நிலையத்தின் முன்பு செவ்வாயன்று நடைபெற் றது. மாவட்டத் தலைவர் தி.சீனிவாசன் தலைமை யிலும், மாவட்ட செயலாளர் ஏ.பெத்தபெருமாள் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

;