districts

img

கரூரில் எல்ஐசி ஊழியர்கள் ஒரு மணி நேரம் வேலை நிறுத்தம்

கரூர், பிப்.21- எல்ஐசி நிறுவனத்தில் நூறு சதவீதம் அன்னிய நேரடி முதலீடு அறிவிப்பை கைவிட வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்ஐசி ஊழியர்கள் சங்கத்தின் கரூர் 1 மற்றும் 2 கிளைகள் சார்பில் ஒருமணி நேரம் வேலையை புறக்கணித்து வேலை நிறுத்த போராட்டம், எல்ஐசி அலுவலகம் கிளை 2 முன்பு கோரிக்கை விளக்க கூட்டம் நடைபெற்றது.  போராட்டத்திற்கு எல்ஐசி ஊழியர்கள் சங்கத்தின் தஞ்சை கோட்ட துணை தலைவர் நல் பெருமாள் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர்கள் பிரகாஷ், செல்வராஜ், கிளை தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.