districts

img

மறுவாழ்வு திட்டத்துடன் ஒத்துழைக்க விருப்பம் மாவோயிஸ்ட் தலைவர்கள் நீதிபதிக்கு கடிதம்

தலச்சேரி, ஜன.16- அரசின் மறுவாழ்வு திட்டத் திற்கு ஒத்துழைக்க தயார் என சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாவோயிஸ்டுகள் தெரிவித்துள் ளனர். கர்நாடக மாநிலம் சிருங் கேரி நென்மாரு தோட்டத்தை சேர்ந்த மாவோயிஸ்ட் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி செயலா ளர் பி.ஜி.கிருஷ்ணமூர்த்தி (விஜய்-47), சிக்மகளூரை சேர்ந்த கபினி தள உறுப்பினர் சாவித்ரி (33), ஜெர்மனா ஹல்லு வள்ளி ஆகியோர் மாவட்ட அமர்வு நீதிபதியிடம் இது தொடர் பான கடிதம் அளித்தனர். மாவோயிஸ்ட் உறவை முடி வுக்குக் கொண்டு வந்து ஜன நாயக முறைக்கு ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகத் தெரி வித்து கிருஷ்ணமூர்த்தி ஆங்கி லத்திலும், சாவித்திரி கன்னடத்தி லும் கடிதம் எழுதியுள்ளனர். பயங் கரவாதத் தடுப்புப் பிரிவின் ஆலோசனைக்குப் பிறகு, செஷன்ஸ் நீதிபதி ஜோபின் செபாஸ்டியன் உள்துறைக்கு விரிவான அறிக்கை சமர்ப்பித் தார். கண்ணூர் மாவட்டம் ஆர ளம் மற்றும் கரிகோட்டக்கரி காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவரையும், கடந்த ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி மாத்தூர் வனச் சோதனைச் சாவடி அருகே ஏடிஎஸ் போலீ ஸார் கைது செய்தனர். இரிட்டி அய்யன்குன்னு உருப்பும்குற்றியில் உள்ள வீடுகளில் துப்பாக்கி முனையில் அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்கி, மாவோயிஸ்ட் துண்டு பிரசுரங்களை விநியோகித்ததாக கிருஷ்ணமூர்த்தி 2017 மார்ச் 20 இல் கைது செய்யப்பட்டார். 2020  பிப்ரவரி 24 அன்று இரவு ஆரளம் பண்ணையின் 13ஆவது பிளாக் கில் உள்ள வீட்டிற்குள் புகுந்து அரிசி மற்றும் காய்கறிகளைத் திருடிய வழக்கில் சாவித்திரி நான்காவது குற்றவாளி. சரணடையத் தயாராகும் மாவோயிஸ்டுகளுக்கு 2018 இல் மறுவாழ்வுத் திட்டத்தை அர சாங்கம் அறிவித்தது. மறு வாழ்வு திட்டங்களில் சரணடைந்த வர்களுக்கு நிதி உதவி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை அடங்கும். இதன்படி லிஜேஷ் என்ற ராமு (37) கடந்த ஆண்டு போலீசில் சரணடைந்தார்.

;