districts

img

இந்தியாவின் இருளை அகற்றுவோம்: சிபிஎம் தெருமுனைப் பிரச்சாரம் தலைவர்கள், எம்எல்ஏ-க்கள் பங்கேற்பு

திருச்சிராப்பள்ளி, ஆக.29 - ‘எல்லோருக்கும் கல்வி, வேலை,  மருத்துவம் கிடைத்திடவும், சம  உரிமை, ஜனநாயகம், சமத்துவம் நிலைத்திடவும், மதவெறி வகுப்பு வாத சக்திகளை தனிமைப்படுத்தி டவும், இந்தியாவில் மதச்சார்பற்ற அடித்தளத்தை பாதுகாத்திட வலி யுறுத்தியும் அத்தியாவசிய பொருட் களின் விலை உயர்வை கட்டுப்படுத் தாத மக்கள் விரோத ஒன்றிய அரசை  கண்டித்தும் இந்தியாவின் இருள் அகற்றுவோம்.  மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்’ என்ற மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பிரச்சார இயக்கம் நாடு முழு வதும் நடைபெற்று வருகிறது.  இதனொரு பகுதியாக டெல்டா மாவட்டங்களின் பல்வேறு இடங்க ளில் நாள்தோறும் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன. திருச்சி மாவட்டம் மலைக் கோட்டை பகுதிக்குழு சார்பில் திங்க ளன்று சத்திரம் பேருந்து நிலை யம், இ.பி.ரோடு, தாராநல்லூர், பெரியகடைவீதி, சின்னக்கடைவீதி, ஆண்டாள்வீதி, சத்துக்கடை உள்ளிட்ட பகுதிகளில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. பிரச்சா ரத்திற்கு சிபிஎம் மலைக்கோட்டை பகுதிக் குழு செயலாளர் ராமர் தலைமை வகித்தார். மக்கள் விரோத மோடி ஆட்சியையும், மோடி அரசு  அகற்றப்பட வேண்டியதன் அவசியத் தையும் விளக்கி சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, மாவட் டக் குழு உறுப்பினர் அன்வர் ஆகி யோர் பேசினர். 

திருவெறும்பூர்
திருவெறும்பூர் ஒன்றியம் எழில் நகரில் ஒன்றியச் செயலாளர் மல்லிகா தலைமையிலும், துவாக்குடி வடக்கு மலை மற்றும் கடைவீதியில் அமர் தலைமையிலும், அண்ணாநகரில் ஆரோக்கியராஜ், பிரபாகரன் தலைமையிலும் வீடு, வீடாக துண்டு பிரசுரம் கொடுத்து பிரச்சாரம் நடை பெற்றது. தா.பேட்டையில் ஒன்றியச்  செயலாளர் பாண்டியன் தலைமை யில் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள் சங்க  மாவட்ட பொருளாளர் சுப்ரமணியன்,  வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் பாலக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பட்டுக்கோட்டை: உ.வாசுகி பங்கேற்பு
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் மக்கள்  சந்திப்பு இயக்கம் ஞாயிற்றுக் கிழமை மாலை நடைபெற்றது. இதை யொட்டி, பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகில், தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றியச் செயலாளர் எஸ். கந்தசாமி தலைமை வகித்தார்.  மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் கோ.நீலமேகம், எம்.செல்வம்  முன்னிலை வகித்துப் பேசினர்.  கொட்டும் மழையிலும், மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி சிறப்புரை யாற்றினார். முன்னதாக, பட்டுக் கோட்டை நகராட்சி 33 ஆவது வார்டு அண்ணா குடியிருப்பு பகுதியில்  வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இதேபோல் மாவட்டம் முழுவதும் மக்கள் சந்திப்பு  இயக்கம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடந்த மக்கள் சந்திப்பு இயக்கத் திற்கு நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.சுபாஷ் சந்திரபோஸ், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.லதா, வடக்கு ஒன்றியச் செயலா ளர் வி.வி.ராஜா ஆகியோர் சிக்கல் கடைத்தெருவில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை விநியோ கித்தனர்.  கீழ்வேளூர் வடக்கு ஒன்றியத் தின் சார்பில் கோவூர் ஊராட்சியில்  சிபிஎம் மாநிலக் குழு உறுப்பின ரும், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பி னருமான வி.பி.நாகைமாலி பிரச்சா ரம் செய்து மக்கள் சந்திப்பு இயக்கத்தை தொடக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். எம்.அபுபக்கர், மாவட்ட குழு உறுப்பி னர் எஸ்.பாண்டியன் ஆகியோர் துண்டு  பிரசுரங்களை விநியோகித்தனர். கீழையூர் ஒன்றியம் ஆலமழை ஊராட்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முருகையன், கீழை யூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் டி.வெங்கட்ராமன் ஆகியோர் துண்டுப் பிரசுரங்களை விநியோகித் தனர்.

;