விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவோம்! தீயணைப்பு துறை விழிப்புணர்வு நிகழ்ச்சி
அறந்தாங்கி, அக்.29 - அறந்தை பிரண்ட்ஸ் ரோட்டரி கிளப் மற்றும் தமிழ்நாடு தீயணைப்புத் துறை மற்றும் மீட்பு பணிகள் இணைந்து, அறந்தாங்கி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் விபத் தில்லா தீபாவளி கொண்டாடுவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. அறந்தை பிரண்ட்ஸ் ரோட்டரி கிளப் தலைவர் ரோட்டரி வெங்கட்குமார் வரவேற்றார். அறந்தாங்கி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சேகர் சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அறந்தாங்கி தீய ணைப்பு துறை நிலைய ஆய்வாளர் மணிகண்டன் தலை மையில், தீயணைப்பு வீரர்கள் வெடி விபத்து ஏற்படும்போது செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவை குறித்து செயல் விளக்கம் அளித்தனர். மேலும் விழிப்புணர்வு நோட்டீஸ் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது. ரோட்டரி சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். அறந்தை பிரண்ட்ஸ் ரோட்டரி கிளப் செயலாளர் கே.சாத்தையா நன்றி கூறினார்.
மாசற்ற தீபாவளியைக் கொண்டாட அறிவுறுத்தல்
புதுக்கோட்டை, அக்.29 - விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடு மாறு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது. இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை அன்று, காலை 6 முதல் 7 மணி வரை யிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவதற்கு பொது மக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசு படுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.வட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்பு களின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்றுகூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு முயற்சிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவமனை கள், பள்ளிகள், நீதிமன்றங்கள் வழிபாட்டுத் தலங்கள் போன்ற அமைதி காக்கப்படும் இடங்கள் மற்றும் குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்” என தெரிவித்துஉள்ளார்.
மொபெட் மீது பேருந்து மோதி இருவர் பலி
தஞ்சாவூர், அக்.29 - புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே யுள்ள பகட்டுவான்பட்டி கீழத் தெருவைச் சேர்ந்தவர் எம்.பழனி வேல் (60). கூலித் தொழிலாளியான இவர் பகட்டுவான்பட்டியி லிருந்து தஞ்சாவூருக்கு மொபெட்டில் திங்கள்கிழமை இரவு வந்து கொண்டிருந்தார். இவருடன் பின்னால் பெண் ஒருவர் அமர்ந்து வந்தார். திருக்கானூப்பட்டி பகுதியில் வந்த இந்த மொபெட் மீது வேளாங்கண்ணியிலிருந்து கேரள மாநிலம் கொல்லம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மோதியது. இதனால், பலத்த காயமடைந்த பழனிவேலுவும், உடன் வந்த பெண்ணும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து வல்லம் காவல் நிலையத்தினர் விசாரிக்கின்றனர்.
கோயில் நகைகள் திருட்டு
தஞ்சாவூர், அக்.29- தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே செம்மங்குடி யில் மகா மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான நகைகள் ஒக்கக்குடியில் உள்ள கோயில் பரம்பரை அறங்காவலர் எஸ்.பாஸ்கர் (54) வீட்டில் பாது காக்கப்பட்டு வருகிறது. இவர் திருச்சியில் தங்கி வேலை பார்த்து வருவதால், வீட்டில் இவரது தாயார் தமிழணங்கு (74) வசித்து வருகிறார். இவர் இரு வாரங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு திருச்சியிலுள்ள மகள் வீட்டுக்கு சென்றுவிட்டு, மீண்டும் திங்கள்கிழமை வீட்டுக்கு திரும்பினார். அப்போது, வீட்டின் முன் பக்கக் கதவில் இருந்த பூட்டுகள், உள்ளே உள்ள பீரோ உடைக்கப்பட்டு, 3.25 கால் பவுன் நகைகள், 2 ஐம்பொன் வெள்ளிக் காப்பு, ஒரு வெள்ளி ஊஞ்சல் உள்ளிட்டவை திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து திருவையாறு காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மணமேல்குடியில் எண்ணும் எழுத்தும் பயிற்சி
அறந்தாங்கி, அக்.29 - புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் பயிற்சியை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் செழியன் தொடங்கி வைத்தார். மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) சிவயோகம் முன்னிலை வகித்தார். நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்கிற அனைத்து ஆசிரியர்களுக் கும் எண்ணும் எழுத்தும் பயிற்சி பாடவாரியாக வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு அடிப்படை திறன்களை வளர்ப்பதற்காக ஒவ்வொரு பாடத்திற்கும் கற்றல்-கற்பித்தல் உபகரணங் களை கொண்டு மாணவர்கள் எளிதில் கற்பதற்கும், ஊக்கப் படுத்துவதற்கும் பாடவாரியாக பயிற்சி வழங்கப்பட்டது.
காதலனுடன் சென்ற மகள்: தாய் விஷம் குடித்து தற்கொலை
தஞ்சாவூர், அக்.29 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பெரிய தெற்குக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ரெங்கசாமி (55). இவரது மனைவி விஜயலதா (48). இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். பட்ட தாரி பெண்ணான இவர்களது மகள், அதே பகுதியைச் சேர்ந்த உறவுக்கார காதலருடன் சென்று விட்டதாக கூறப்படுகிறது. வயலில் நடவு வேலை பார்த்துக் கொண்டிருந்த விஜய லதாவுக்கு மகள் வீட்டைவிட்டு போன தகவல் தெரிந்து கணவரை அழைத்துக் கொணடு மகளின் காதலன் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது வீடு பூட்டியிருந்தது. இதனால் விரக்தியடைந்த விஜயலதா, வயலுக்கு வாங்கியிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயக்கமானார். கணவர் ரெங்கசாமி மற்றும் அவரது உறவினர்கள் உட னடியாக விஜயலதாவை பேராவூரணி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்பு, மேல் சிகிச்சைக்காக புதுக் கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி விஜயலதா உயிரி ழந்தார். இதுகுறித்து ரெங்கசாமி கொடுத்த புகாரின் பேரில், திருச்சிற்றம்பலம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தஞ்சை பெரிய கோயிலில் நவ.9, 10-இல் சதய விழா
தஞ்சாவூர், அக்.29 - தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039 ஆம் ஆண்டு சதய விழா நவம்பர் 9, 10 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரகத்தில் சதய விழா ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. இதில், மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039 ஆம் ஆண்டு சதயத் திருவிழா நவம்பர் 9, 10 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. காவல்துறை, தீயணைப்பு துறை, பொதுப் பணித் துறை, மின் வாரியம், மாநகராட்சி நிர்வா கம், சுகாதாரத் துறை, போக்குவரத்துத் துறை, இந்து சமய அறநிலையத் துறை, கலை, பண்பாட்டுத் துறை, சுற்றுலா துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் முன்னேற்பாடு பணி களைச் சிறப்பான முறையில் மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தினார். கூட்டத்தில் மேயர் சண்.இராமநாதன், மாவட்ட வரு வாய் அலுவலர் தெ.தியாகராஜன், சதய விழாக் குழுத் தலைவர் து.செல்வம், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
மானியத்தில் ஜிங்க் சல்பேட் பெறலாம்
பாபநாசம், அக்.29 - தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை வேளாண் உதவி இயக்குநர் மோகன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “அம்மாப்பேட்டை வட்டாரத்தில், மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின்கீழ் ஜிங்சல்பேட் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படுகிறது. அம்மாப்பேட்டை வட்டார விவசாயிகள் அம்மாப்பேட்டை, சாலியமங்கலம், மெலட்டூர், திருக்கருக்காவூர் வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம்” எனக் கூறப்பட்டு உள்ளது.
மலேசியாவில் சிக்கித் தவிக்கும் மகனை மீட்டுத் தர தந்தை கோரிக்கை
தஞ்சாவூர், அக்.29 - மலேசியாவில் சிக்கித் தவிக்கும் தனது மகனை மீட்டுத் தரக் கோரி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் தந்தை திங்கள் கிழமை முறையிட்டார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், பாபநாசம் முக்கா வட்டம் புரசகுடியைச் சேர்ந்த ராமையன், தனது மகள் மீனாவுடன் அளித்த மனுவில் கூறி யிருப்பதாவது: எனது மகன் செல்வம் 2016 ஆம் ஆண்டில் மலேசியாவுக்கு வேலைக்காகச் சென்றார். தொடர்ந்து ஊதியம் பெற்று வீட்டுக்கு அனுப்பி வந்த நிலையில், 2020 ஆம் ஆண்டில் கொரோனா காரணமாக நின்று போனது. கடந்த ஓராண்டாக அவரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. எங்கே இருக் கிறார் என்பதும் தெரியவில்லை. இதை யறிந்து கொண்ட தஞ்சாவூரைச் சேர்ந்த முகம் தெரியாத நபர், சில மாதங்களுக்கு முன்பு கைப்பேசி மூலம் பேசி, செல்வத்தை ஊருக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி இணைய வங்கி மூலம் ரூ. 50 ஆயிரத்தை வாங்கிக் கொண்டு, எனது மகனை ஊருக்கு அனுப்பாமல் ஏமாற்றிவிட்டார். இந்நிலையில், மலேசிய காவல் துறை யினரிடம் பிடிபட்டுள்ள செல்வத்தை ஊருக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி ரூ.20 ஆயிரத்தை கேட்டு மர்ம நபர் கைப்பேசி மூலம் பேசினார். இதன் பின்னர் எனது மகனைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. நானும், எனது மனைவியும் வயதான காலத்தில் தவித்து வருகிறோம். எனவே, எனது மகனை மலேசியா நாட்டிலிருந்து மீட்டுத் தருமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அம்மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
டிராவல்ஸ் நிறுவன மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த உரிமையாளரின் மனைவி கைது
தஞ்சாவூர், அக்.29 - தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை, நந்தனம் பகுதியை சேர்ந்தவர் ஹக்கீம் (42). இவர் ஃபரீனா டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். தனது டிராவல்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தால், லாபத்தில் பங்குத்தொகை தருவதாகவும், ஒரு லட்சம் முதலீடு செய்தால், குறைந்தபட்சம் மாதம் ரூ.2,500 முதல், லாபத் தொகை வழங்கப்படும் என விளம்பரப்படுத்தினார். இதனை நம்பி பல்வேறு மாவட்டங்க ளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், சுமார் ஒரு லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்தனர். ஆரம்பத்தில், முதலீடு செய்தவர்களுக்கு பங்குத் தொகையை வழங்கி வந்த ஹக்கீம், கடந்த 2022 ஆம் ஆண்டில், பங்கு தொகையை வழங்கா மல், முதலீட்டாளர்களை ஏமாற்றி விட்டு, தனது மனைவி பாத்திமாவுடன் தலைமறை வானார். இதனால், பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு, தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணையை கிடப்பில் போட்டனர். இதனால், பாதிக்கப்பட்டவர்கள் பலரும் ஆட்சியரிடம் புகார் மனுக்களை அளித்தனர். இதையடுத்து இவ்வழக்கு மாவட்ட குற்றப்பிரிவில் இருந்து, பொருளாதார குற்றப்பிரிவுக்கு கடந்த 2024 ஜூலை மாதம் மாற்றப்பட்டது. தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை துணைக் கண்கா ணிப்பாளர் பூரணி தலைமையில், உதவி ஆய்வாளர் செந்தமிழன் ஆகியோர் அடங்கிய குழுவினர், கோவை மாவட்டம் தொப்பம்பட்டியில் தங்கியிருந்த ஹக்கீமை, கடந்த ஆக.5 அன்று கைது செய்தனர். இதையறிந்த அவரது மனைவி பாத்திமா (35) தலைமறைவானார். தொடர்ந்து பாத்திமாவை பொருளாதார குற்றப்பிரிவினர் தேடி வந்தனர். அப்போது பத்திமா தஞ்சாவூர், கோவை, திருச்சி என பல ஊர்களில் இடம் மாறி வசித்து வருவ தாக தகவல் கிடைத்தது. தொடர் கண்கா ணிப்புக்கு பிறகு, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் பகுதியில் பாத்திமா தங்கி இருப்பதை அறிந்து, திங்கள்கிழமை இரவு பாத்திமாவை கைது செய்து, மதுரையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். விசாரணையில், சுமார் 500-க்கும் மேற்பட்டோரிடம் 40 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்தது தெரிய வந்து உள்ளது.