districts

img

இஸ்ரேலை கண்டித்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்

பாலஸ்தீன மக்கள் மீதான இன படுகொலையை தடுத்து நிறுத்தக் கோரி சிபிஎம், சிபிஐ, சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் மாநிலம் தழுவிய இயக்கத்தின் ஒரு பகுதியாக வேலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும், திருப்பத்தூரில் பாரத ஸ்டேட் வங்கி முன்பும், திருவண்ணாமலை மற்றும் ஆரணியில் அண்ணா சிலை அருகிலும் கள்ளக்குறிச்சியில் கச்சேரி சாலை அம்பேத்கர் சிலை அருகிலும் கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  இதில் மாவட்டச் செயலாளர்கள் எஸ்.தயாநிதி, எம்.சிவக்குமார், டி.எம்.ஜெய்சங்கர், ஜி.கே.நஞ்சுண்டன், மாநிலக்குழு உறுப்பினர்கள் பி.டில்லிபாபு, எஸ்.டி.சங்கரி மற்றும் மாவட்ட செயற்குழு, மாவட்ட குழு உறுப்பினர்கள். வட்டச் செயலாளர்கள், ஒன்றிய, நகரச் செயலாளர்கள் உட்பட இடதுசாரி கட்சித் தலைவர்கள் உரையாற்றினர்.