திருவாரூர், ஜுன் 14 - திருவாரூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக குருதி கொடையா ளர் தினத்தினையொட்டி, தன்னார்வலர்கள் குருதி கொடையளிப்பதை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ பார்வையிட்டு குருதி கொடை அளித் தார். ஜூன் 14 அன்று உலக குருதி தானம் செய்பவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு உலக ரத்த தானம் செய்பவர் கள் தினத்தின் 20 ஆவது ஆண்டு நிறைவு நாளாகும். உலக குருதி கொடையாளர் தினத்தை யொட்டி, திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற ரத்த தான முகாமில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ மற்றும் தன்னார் வலர்களும் குருதி கொடையளித்தனர். தொ டர்ந்து திருவாரூர் மாவட்ட ஆட்சியரக கூட்ட ரங்கில் குருதி கொடையளித்த தன்னார்வலர் களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றி தழ் வழங்கப்பட்டது. முன்னதாக, மாவட்ட ஆட்சியர் தலைமை யில் அனைத்துத் துறை அரசு அலுவலர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ் வில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை முதல்வர் மரு.ஜோசப்ராஜ், மருத்து வம் மற்றும் ஊரக நலப்பணிகளின் இணை இயக்குநர் மரு.கா.திலகம், துணை இயக்கு நர் (காசநோய்) நோய்குறியியல் துறை மற்றும் மாவட்ட குருதி பரிமாற்ற அலுவலர் மரு.சுபசித்ரா, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.பிரபா உள்ளிட்ட அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.