கலைஞருக்கு மரியாதை
பாபநாசம், ஜூன் 3 - தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூர் அருகே கொத் தங்குடி ஊராட்சி, உதா ரமங்கலத்தில் தமிழக முன்னாள் முதல்வர், திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் தலைவர் கலைஞரின் பிறந்த நாளையொட்டி, அவரது படத்திற்கு கொத்தங்குடி ஊராட்சி மன்றத் தலை வர் பழனி மாலையணி வித்து மரியாதை செலுத் தினார். இதில் திமுக நிர்வாகி ஜெயமூர்த்தி உள்பட பலர் பங்கேற்ற னர்.
சாலை விபத்தில் ஒருவர் பலி
தஞ்சாவூர், ஜூன் 3- தஞ்சாவூர் அருகே போக்குவரத்தைச் சீர்ப டுத்துவதற்காக அமைக் கப்பட்டுள்ள இரும்பு தடுப்பு மீது மொபெட் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தார். தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகேயுள்ள துருசிப்பட்டியைச் சேர்ந்தவர் சி.லட்சும ணன் (50). கூலித் தொழி லாளியான இவர் நாட் டரச ன்கோட்டையிலுள்ள தனது உறவினர் வீட்டுக் குச் செல்வதற்காக மொ பெட்டில் சனிக்கிழமை காலை சென்று கொண் டிருந்தார். திருமலை சமுத்திரம் அருகே சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் பகுதி யில் சென்றபோது, கட்டுப் பாட்டை இழந்த மொபெட் போக்குவரத்தைச் சீர்ப டுத்துவதற்காக அமைக் கப்பட்டுள்ள இரும்பு தடுப்பு மீது மோதியது. இதில் பலத்த காய மடைந்த லட்சுமணன், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சனிக்கிழமை மாலை உயிரிழந்தார். வல்லம் காவல் நிலை யத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற் கொண்டுள்ளனர்.
பைக்குகள் மோதல்: ஒருவர் பலி; 2 பேர் காயம்
தஞ்சாவூர், ஜூன் 3- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூணி அருகே உள்ள மதன்பட்டவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கவின்ராஜ் (55). இவரது மனைவி உமா (50). இவர்கள் இரு வரும் பேராவூரணிக்கு ஏடிஎம்மில் பணம் எடுப்ப தற்காக வந்து விட்டு, சனிக்கிழமை இரவு பைக்கில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்த னர். அப்போது ஆண்ட வன் கோவில் பகுதியில் டாஸ்மாக் கடை அருகே, எதிரே வந்த புனல்வாசல் கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கிய சேவியர் என்பவர் வந்த பைக்கும் இவரது பைக்கும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் மூவரும் பலத்த காயமடைந்தனர். அருகில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு, பேரா வூரணி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத் தனர். பேராவூரணியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு புதுக் கோட்டை மருத்துவக்கல் லூரி மருத்துவமனைக்கு ஒரே ஆம்புலன்ஸில் மூவ ரும் அனுப்பி வைக்கப் பட்டனர். புதுக்கோட்டை செல் லும் வழியில் கவின்ராஜ் உயிரிழந்தார். ஆரோக் கிய சேவியர், உமா இரு வரும் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து பேராவூரணி காவல்துறையினர் வழப் குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை: வாக்கு எண்ணிக்கைக்கு 204 பணியாளர்கள் நியமனம்
தஞ்சாவூர், ஜூன் 3- தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் வாக்கு எண்ணிக் கைக்கு 204 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு முடி வடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க் கிழமை (ஜூன் 4) நடைபெறவுள்ளது. இதில், தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரி வளாகத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி யில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் பணிக்கு மொத்தம் 204 பேர் நிய மிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகு திக்கும் 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. அதிகபட்சமாக திருவையாறு சட்டப் பேரவைத் தொகுதிக்கு 23 சுற்று களும், தஞ்சாவூர், மன்னார்குடி, ஒரத்தநாடு ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு தலா 21 சுற்றுகளும், பட்டுக் கோட்டை தொகுதிக்கு 20 சுற்றுகளும், குறைந்தபட்சமாக பேராவூரணி தொகுதிக்கு 19 சுற்றுகளும் வாக்குகள் எண்ணப் படவுள்ளன. வாக்கு எண்ணிக்கையின் கடைசி சுற்றுகளில் மேஜைகளின் எண்ணிக்கை குறைந்துவிடும். இப்பணியில் ஈடுபடும் பணியாளர்கள் கணினி மூலமாக, மே 27 அன்று முதல் கட்டமாகத் தேர்வு செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து கணினி மூலம் இரண்டாம் கட்டத் தேர்வு ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. மேலும், வாக்கு எண்ணிக்கை மையத் திலும், சுற்றுப் பகுதிகளிலும் ஏறத்தாழ 2 ஆயிரம் காவ லர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
மானியத்தில் பசுந்தாள் உர விதைகள்
பாபநாசம், ஜூன் 3 - பசுந்தாள் உர விதைகள் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது என தஞ்சாவூர் வேளாண்மை இணை இயக்குநர் (பொ) சுஜாதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “பசுமைப் புரட்சியின் விளைவாக இந்தியாவில் உணவு உற்பத்தியானது, 50 வரு டங்களில் நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. நமது உணவு உற்பத்தி யினை தன்னிறைவு அடைய செய்துள்ளது. எனினும் பசுமைப் புரட்சி யின் காரணமாக மண் வளம் குறைதல், நுண்ணூட்ட சத்து குறைபாடு, ஆற்றல் தட்டுப்பாடு, விளைச்சல் சமச்சீரற்ற தன்மை, சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற எதிர் விளைவுகளை சந்திக்க நேரிட்டது. இந்தக் காரணங்களால் இயற்கை உரங்களின் பயன்பாட்டின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. எனவே பசுந்தாள் உர பயிர்களை சாகுபடி செய்து, நிலத்தில் உழுது, மக்க வைத்து மண் வளத்தை கூட்ட ஏதுவாக அனைத்து விவசாயிகளுக்கும் பசுந்தாள் உர விதைகள் 50 சத மானியத்தில் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு கிலோ முழு விலை ரூ. 99.50 மானியம் ரூ.49.75. விவசாயி பங்குத் தொகை ரூ. 49.75/- ஆகும். பசுந்தாள் உர பயிர்கள் வளம் குன்றிய மண்ணிலும் நன்கு வளரும். இது அதிவேகமாக வளரக் கூடிய பயிராகும். எனவே இதனை பயிர் சுழற்சியில் பயிர் செய்யலாம். இது நிலத்தில் எளிதில் மக்கக் கூடியது. இவை மண்ணில் பொல பொலப்பு தன்மையை அதிகரிக் கிறது. நுண் உயிர் பெருக்கத்திற்கு வழிவகுக்கிறது. ரசாயன மாற்றங்களை ஏற்படுத்துவதால், நிலத்தில் உள்ள களர், உவர் தன்மைகளை மாற்றுகிறது. மண்ணில் அங்கக கரிமச் சத்தின் அளவை அதிகரிக்கிறது. நிலத்தில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துகளை உருவாக்குகிறது. மொத்தத் தில் பசுந்தால் உர பயிர்கள் மண்வளத்தை கூட்டி மகசூலை அதிகரிக்க உதவுகிறது. எனவே, விவசாயிகள் மானியத்தில் பசுந்தாள் உர விதை களை பெற்று பயனடையலாம்” என கூறப்பட்டுள்ளது.
கடல் பகுதிகளில் தொகுதிகளை உருவாக்கினார்களா? கருத்துக் கணிப்பு குறித்து அமைச்சர் எஸ்.ரகுபதி கேள்வி
புதுக்கோட்டை, ஜூன் 3 - கடற்பகுதிகளில் புதிய தொகுதிகளை உருவாக்கி கருத்துக் கணிப்பை உருவாக்கினார்களா என மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கிண்டலுடன் கேள்வி எழுப்பி னார். புதுக்கோட்டையில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டியில், “வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு கள் நிறைய வந்துள்ளன. அவற்றில் நாட்டிலுள்ள மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையைவிடவும் அதிக மாக குறிப்பிட்டுள்ளார்கள். வங்காள விரிகுடாவுக்கு கிழக்கேயும், அரபிக் கடலுக்கு மேற்கேயும் புதிதாக தொகுதிகளை கடலுக்குள் உருவாக்கி யுள்ளார்களா? அல்லது மாநிலங்களவை உறுப்பினர் எண்ணிக் கையையும் சேர்த்துக் கொண்டார்களா? கருத்துக் கணிப்பு களைப் பொய்யாக்கி இந்தியா கூட்டணி வெற்றி பெறும். அதே கருத்துக் கணிப்புகளில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி வெற்றி பெறும் எனச் சொல்லியிருக்கிறார்களே எனக் கேட்கிறீர்கள். தமிழ்நாட்டில் அதைத் தவிர வேறு எதை யும் சொல்ல முடியாது. அதனால் திமுக அணி வெற்றி பெறும் என சொல்லியிருக்கிறார்கள். அவ்வாறு மாற்றிச் சொன் னாலும் மக்கள் நம்ப மாட்டார்கள்” என்றார்.
புதுமைப் பெண் திட்டத்தின்கீழ் 11,800 பெண்கள் பயன் திருச்சி ஆட்சியர் தகவல்
திருச்சிராப்பள்ளி, ஜூன் 3- தமிழகத்தில் உள்ள ஏழை-எளிய குடும்பங்களைச் சார்ந்த மாணவிகள் உயர்கல்வியை கற்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் அரசுப் பள்ளி களில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் “புதுமைப் பெண்” திட்டத்தினை தொடங்கி வைத்தார். இதன்மூலம் அரசுப் பள்ளிகளில் மாணவிகளின் சேர்க்கை அதிகரித்துள்ளது. அதிக அளவிலான பெண்கள் உயர்கல்வி பெற்றிட இத்திட்டம் வழிவகுத்துள்ளது. இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவிக்கையில், “திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 179 கல்லூரிகள் இருக்கின்றன. அதில் புதுமைப்பெண் திட்டத்தில் 143 கல்லூரியில் உள்ள மாணவிகள் தகுதிப் பெற்றுள்ளனர். மேலும் 143 கல்லூரிகளில் இதுவரை மொத்தம் 11,800 பெண்கள் பயனடைந்துள்ளனர். தற்போது 9,030 மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். அதில் முதல் ஆண்டில் 1631 மாணவிகளும், 2 ஆவது ஆண்டில் 3240 மாணவிகளும், 3 ஆவது ஆண்டில் 4,159 மாணவிகளும் பயன்பெற்று வருகின்றனர். மேலும் 2,770 பெண்கள் பயனடைந்துள்ளனர்” என்றார்.
ஜெயக்குமார் வழக்கு: 1,500 பக்க வாக்குமூலங்களை சிபிசிஐடி அதிகாரிகள் ஆய்வு
திருநெல்வேலி ,ஜூன் 3- நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொ டர்ந்து பல்வேறு கோணங்களில் விசார ணையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜெயக்குமாரின் குடும்ப உறுப்பினர் கள், நண்பர்கள், உறவினர்கள், வேலை யாட்கள், ஊர் மக்கள் என பலதரப்பட்ட வர்களிடமும் விசாரணை நடத்தி முடித்துள் ளனர். இந்நிலையில் ஜெயக்குமார் உடல் கிடந்த தோட்டத்தில் சிக்கியுள்ள ஆதா ரங்கள், சாட்சியங்களின் வாக்குமூலங் களை போலீசார் கவனமாக ஆராய்ந்து வரு கின்றனர். கடந்த 4-ந்தேதி ஜெயக்குமார் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அதற்கு முந்தைய நாள் மற்றும் அதற்கு அடுத்த நாள் வரை கரைசுத்துபுதூர் சுற்றுவட்டா ரத்தில் அதிகம் பயன்பாட்டில் இருந்த செல்போன் எண்கள் பட்டியலை எடுத்துள்ள னர். அதன் மூலம் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் ஒரு திருப்பம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஜெயக்குமார் வழக்கில் அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டவர்களிடம் ஏற்கனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான தனிப் படையினர் எழுத்து பூர்வமாக வாங்கிய தகவல்களை ஆராயும் பணி நடக்கிறது. 1,500 பக்கங்கள் கொண்டதாக ஒப்படைக்கப் பட்ட அந்த தகவல்களை சி.பி.சி.ஐ.டி. காவல் ஆய்வாளர் உலகராணி தலைமையி லான குழுவினர் கவனமாக படித்து வரு கின்றனர். அதனை தொடர்ந்து அந்த கடி தத்தில் குறிப்பிடப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த திட்டமிட்டிருப்ப தாக தகவல் வெளியாகி உள்ளது.
செம்பட்டி அருகே 100 ஏக்கரில் மக்காச்சோளப் பயிர்கள் நாசம் விவசாயிகள் கவலை-நிவாரணம் வழங்க கோரிக்கை
சின்னாளப்பட்டி,ஜூன் 3- திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி யை அடுத்த ஆத்தூர் ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட எஸ்.பாறைப்பட்டி, வண்ணம்பட்டி, மல்லையாபுரம், கெப்பு சோலைப்பட்டி, கெண்டையம்பட்டி, ராம நாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 100-ஏக்கருக்கு மேல் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு மக்காச்சோளம் பயிரிட்டனர். தற்போது நன்கு விளைந்து அறுவடை செய்யும் தருவாயில் விவசாயிகள் அறு வடை செய்ய சென்றபோது, மக்காச் சோளம் கதிரில் மக்காச்சோளம் விளைச்சல் இல்லாமல் சோடையானதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த, வேளா ண்மை துறை அதிகாரிகள் மக்காச் சோளத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். ஒரு ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம் செலவு செய்தும், கடந்த நான்கு மாதங்களாக தண்ணீர் பாய்ச்சி, உரமிட்டும், களை எடுத்தும் அறுவடைக்கு தயாரான போது, மக்காச்சோளம் இல்லாமல் சோடையானதால்,விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதை அடுத்து மிகவும் கவலையடைந்துள்ளனர். இது குறித்து, தமிழக அரசும் மாவட்ட நிர்வாக மும் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட விவ சாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவ சாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தெருநாய்க்கு பயந்து ஓடிய 20 ஆடுகள் வாகனம் மோதி பலி
ஒட்டன்சத்திரம், ஜூன் 3- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சத்திரப்பட்டியைச் சேர்ந்தவர் சிவன்பாண்டி, இவர் 200 ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஒட்டன்சத்திரம் - பழனி நான்கு வழிச்சாலையின் ஓரத்தில் வேலூரில் பட்டியில் ஆடுகளை அடைத்து வைத்திருந்தார். ஜூன் 2 அன்று அதிகாலை 3 மணிக்கு அந்த பகுதி யில் இருந்து தெருநாய்கள் பட்டியில் புகுந்தன. தெரு நாய்களுக்கு பயந்து நான்கு வழிச்சாலையை கடந்து ஆடுகள் தப்பிச்செல்ல முயன்றபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே 20 ஆடுகள் இறந்தன. இது குறித்து சத்திரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலை விபத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளர் பலி
விருதுநகர், ஜூன் 3- வெம்பக்கோட்டை அருகே உள்ள சங்கரமூர்த்தி பட்டியை சேர்ந்தவர் நடராஜன்(53). இவர், இராஜ பாளையம் தெற்கு காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்தார். ஞாயிறன்று, இருசக்கர வாகனத்தில் தனது மகனு டன் சென்று கொண்டிருந்தார். சொக்கலிங்கபுரம் அருகே வந்தபோது, மற்றொரு இருசக்கர வாகனம் வந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஏற்பட்ட விபத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். இதில் பலத்த காயமடைந்த நடராஜனை அருகே இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நடராஜன் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து நடராஜன் மனைவி முரு கேஸ்வரி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.