districts

img

பட்டுக்கோட்டையில் ஜமாபந்தி

தஞ்சாவூர், ஜூன்.27 -  தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தில் 1433- ஆம் பசலி ஆண்டிற்கான ஜமாபந்தியில் (வருவாய் தீர்வாயம் கணக்குகள் முடித்தல்) மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு கிராம கணக்குகளை ஆய்வு செய்து வருகின்றார்.  ஆறாவது நாளாக துவரங்குறிச்சி சரகத்திற்கு வருவாய் தீர்வாயம் நடைபெற்றது.இதில் துவரங் குறிச்சி சரகத்தை சேர்ந்த மக்கள், வருவாய் தீர்வாய அலுவலரிடம் மனுக்கள் அளித்தனர்.இதில் உடனுக்கு டன் தீர்வு காணப்பட்டு 7 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை மற்றும் 6 நபர்களுக்கு பட்டா மாறுதல் ஆணை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை வட்டாட்சியர் சுகுமார், வட்ட வழங்கல் அலுவலர் ரகுராமன் மற்றும் இதர  துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.