districts

திருச்சி முக்கிய செய்திகள்

அரசுப் பள்ளியில்  முப்பெரும் விழா

அரியலூர், பிப்.17- அரியலூர் மாவட்டம்,  சிறுவளூர் கிராமத்தி லுள்ள அரசு உயர் நிலைப் பள்ளியின் 22 ஆம் ஆண்டு விழா மற்றும் தமிழ்கூடல் விழா, திருக்குறள் பெயர் பலகை திறப்பு  விழா ஆகிய முப்பெ ரும் விழாக்கள் நடை பெற்றன. விழாவுக்கு அப் பள்ளி தலைமை ஆசி ரியர் சின்னதுரை தலைமை வகித்தார். உலக திருக்குறள் கூட்ட மைப்பு மாநிலத் தலை வர் ஞானமூர்த்தி, தொழிலதிபர் ராஜா ஆகி யோர் சிறப்புரை யாற்றினர். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு களையும், அனைத்து மாணவர்களுக்கும் சில்வர் குடிநீர் பாட்டில் களையும் வழங்கினர். உலக திருக்குறள் கூட்டமைப்பு மாநிலப் பொருளாளர் செளந்தர் ராஜன், மாவட்ட நூலக அலுவலர் ஆண்டாள், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பழனியம்மாள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் அகிலா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சின்ன துரை, தொழிலதிபர் அழகுதுரை, வார்டு உறுப் பினர்கள் உள்ளிட்ட பலர்  பங்கேற்றனர்.

புதுகையில் எழுச்சியுடன் நடைபெற்ற வாலிபர் சங்க இரத்த தான  கொடையாளர்களின் பேரணி - பொதுக்கூட்டம்

புதுக்கோட்டை, பிப்.17- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் சார்பில் இரத்த தானக் கழக மாநில  மாநாட்டையொட்டி குருதிக் கொடை யாளர்களின் பேரணி-பொதுக்கூட்டம் சனிக்கிழமை புதுக்கோட்டையில் எழுச்சியுடன் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இரத்ததானக் கழக மாநில  மாநாடு பிப்.17, 18 தேதிகளில் புதுக் கோட்டையில் நடைபெற்று வருகிறது. மாநாட்டையொட்டி சனிக்கிழமை மாலை புதுக்கோட்டை திலகர் திடலில் இருந்து குருதிக் கொடையாளர்களின் பேரணி நடைபெற்றது. மிகுந்த உற்சாகத்துடனும் எழுச்சி யுடனும் நடைபெற்ற பேரணியை, கந்தர்வகோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.  தொடர்ந்து மேளதாளம் முழங்க நடை பெற்ற பேரணி வடக்குராஜவீதி, மேல ராஜவீதி, அண்ணாசிலை உள்ளிட்ட  நகரின் முக்கிய வீதிகள் வழியாக  சின்னப்பா பூங்காவில் நிறைவடைந்தது. சின்னப்பா பூங்காவில் நடைபெற்ற  பொதுக் கூட்டத்திற்கு வாலிபர் சங்க  மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக்  தலைமை வகித்தார். மத்தியக்குழு உறுப்பினர் எம்.ஷாஜர், கந்தர்வ கோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப் பினர் எம்.சின்னதுரை, சங்கத்தின் மாநி லச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், பொருளாளர் எஸ்.பாரதி, துணைத் தலைவர்கள் எஸ்.மணிகண்டன், எம்.பிரியங்கா, எல்.பி.சரவணத்தமிழன், துணைச் செயலாளர்கள் செல்வராஜ், பா.லெனின் உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக வரவேற்புக் குழுச் செய லாளர் ஆ.குமாரவேல் வரவேற்க, வாலி பர் சங்க மாவட்டத் தலைவர் ரா.மகா தீர் நன்றி கூறினார். பேரணி-பொதுக் கூட்டத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான வாலிபர்கள் பங்கேற்றனர்.

புதிய மின்சார பைக்கின் பேட்டரி பழுது: நுகர்வோருக்கு நஷ்டஈடு வழங்க உத்தரவு

அரியலூர், பிப்.17 - புதிய மின்சார இருசக்கர வாகனத்தின் (electric bike) பேட்டரி வாங்கிய இரு  மாதத்துக்குள், பழுதானதால், நுகர்வோ ரிடம் வாகனத்தை பெற்றுக்கொண்டு அவ ருக்கு நஷ்ட வழங்க வேண்டுமென சம்பந்தப் பட்ட தனியார் நிறுவனத்துக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது. அரியலூர் மாவட்டம் கரைவெட்டி தெற்குத்  தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(50). இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு, அரியலூர்  வாலாஜா நகரிலுள்ள ஸ்ரீ பன்னீர் மோட் டார்ஸ் என்ற நிறுவனத்தில் ரூ.70,000-த்துக்கு  ‘ரிமார்க்’ என்ற மின்சார இருசக்கர வாக னத்தை வாங்கியுள்ளார். இந்த வாகனம் வாங்கிய 2 மாதத்திலேயே அதன் பேட்டரி பழுதடைந்தது. இதையடுத்து, ராஜேந்திரன் சம்பந்தப் பட்ட நிறுவனத்திடம் பேட்டரியை மாற்றித் தரு மாறு கேட்டதற்கு, அந்நிறுவனம் வாகனத் தயாரிப்பு நிறுவனம் மூடப்பட்டதால் தங்க ளால் ஒன்றும் செய்ய இயலாது என்று தெரி வித்ததாக கூறப்படுகிறது. பின்பு, இது குறித்து அரியலூர் காவல் நிலையத்தில் ராஜேந்திரன் அளித்த புகாரையடுத்து புதிய பேட்டரி மாற்றி கொடுக்கப்பட்டது. அதன் பிறகும் வாகனம் சரியான வேகத் தில் இயங்காததால், ராஜேந்திரன் கடந்த நவம்பர் மாதம் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடுத்தார்.  வழக்கை விசாரித்து வந்த ஆணையத் தலை வர் தமிழ்ச்செல்வி, உறுப்பினர்கள் பாலு, லாவண்யா ஆகியோர் அடங்கிய அமர்வு, “ஸ்ரீ பன்னீர் மோட்டார்ஸ் நிறுவனம் ராஜேந்திரனி டமிருந்து வாகனத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டு, வாகனத்தின் மதிப்பு ரூ.70,000, அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ரூ.20,000 மற்றும் வழக்குச் செல வுக்காக ரூ.1000 ஆகியவற்றை ஒரு மாதத் திற்குள் வழங்க வேண்டும்” என உத்தர விட்டது.

ஊராட்சி மன்ற அலுவலகம்,  அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா

பாபநாசம், பிப்.17 - தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே ஈச்சங்குடியில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத் திறப்பு விழா நடைபெற்றது.  அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.28.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை தமிழக முதல்வர் காணொலி மூலம் திறந்து வைத்தார். இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில், ஊராட்சித் தலைவர் பத்மாவதி, துணைத் தலைவர் சிங்காரவேலு, ஊராட்சி ஒன்றியத் தலைவர் சுமதி, ஊராட்சிச் செயலர் மோகன்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வழுத்தூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தையும் தமிழக முதல்வர் காணொலி மூலம் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், ஊராட்சித் தலைவர் சாந்தி, துணைத் தலைவர் முகமதுசாலி, ஊராட்சிச் செயலர் சசிகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

பொது வேலைநிறுத்தம்  திருச்சி பெல் தொழிலாளர்கள் 98 சதவீதம் பேர் பங்கேற்பு

பொது வேலைநிறுத்தம்  திருச்சி பெல் தொழிலாளர்கள் 98 சதவீதம் பேர் பங்கேற்பு திருச்சிராப்பள்ளி, பிப்.17-  ஜனநாயக, தொழிலாளர், விவ சாயிகள் விரோத ஒன்றிய பாஜக  அரசை கண்டித்தும், பொதுத்துறை களை தனியாருக்கு விற்கக் கூடாது. போராடி பெற்ற 44 தொழிலாளர் நலச் சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றியதை திரும்ப பெற வேண்டும்  என்பன உள்ளிட்ட 27 அம்ச கொள் கைகளை வலியுறுத்தி அனைத்து  தொழிற்சங்கங்களில் சார்பில் திருச்சி  பி.ஹெச்.ஈ.எல் தொழிற்சாலையில் வேலைநிறுத்த போராட்டம் நடை பெற்றது. இந்த வேலைநிறுத்தத்தில் பெல் தொழிலாளர்களின் முழு ஆதரவுடன் 98 சதவீத தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்

பெண்களுக்கு பாலியல் தொல்லை:  குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

அரியலூர், பிப்.17- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே  உள்ள தண்டலை கிராமம் தேரடி பகுதியைச் சேர்ந்த வர் ஞானசேகர் (35). இவர் ஜேசிபி ஆபரேட்டராக உள்ளார். இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு பாலி யல் தொல்லை கொடுத் துள்ளார்.  இது தொடர்பான வழக் கில் அவர் கைது செய்யப்பட் டார். பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த  அவர், வேறொரு பெண்ணிட மும் பாலியல் சீண்டலில் ஈடு பட்டுள்ளார். அது தொடர் பான வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  தற்போது சிறையில் இருந்து வெளியே வந்த ஞானசேகர், பாலியல் தொல்லை கொடுத்த முதல் பெண்ணிடமே மீண்டும் தக ராறு செய்து, அவரை மிரட்டி  பாலியல் தொந்தரவு செய்ய  முயன்றுள்ளார். ஞான சேகரிடமிருந்து தப்பி வந்த  அந்தப் பெண், ஜெயங்கொண் டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் ராம ராஜன் வழக்குப் பதிந்தார். தொடர்ந்து பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஞான சேகரை 3-வது முறையாக போலீசார் கைது செய்து ஜெயங்கொண்டம் சிறை யில் அடைத்தனர்.  இந்நிலையில், இளம் பெண்களுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த ஞானசேகர் வெளியில் வந்தால் மீண்டும் குற்றச் செயலில் ஈடுபடுவார் என்பதால், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் செல்வ ராஜ், மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணாவுக்கு பரிந்துரை செய்தார். மாவட்ட ஆட்சியர், ஞான சேகரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டதையடுத்து, அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி  மத்திய சிறையில் அடைக்கப் பட்டார்.

வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த நபர் கைது

தஞ்சாவூர், பிப்.17-   வேலை வாங்கித் தருவதாக  விளம்பரம் செய்து, பட்டுக்கோட்டை யைச் சேர்ந்தவரிடம் ரூ.57 ஆயி ரத்தை வாங்கி ஏமாற்றியவரை காவல் துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை அருகே மன்னங்காட்டைச் சேர்ந்தவர் என்.சுரேஷ்குமார் (39). இவர் பட்டுக்கோட்டை பேருந்து நிலை யத்தில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி விளம்பரத்தில் மொரீசியஸ் நாட்டில்  வேலைவாய்ப்பு எனக் குறிப்பிட்டிருந் ததைப் பார்த்தார். அதில் குறிப்பிட் டிருந்த எண்ணுக்கு சுரேஷ்குமார் தொ டர்பு கொண்டபோது, எதிர்முனையில் பேசிய நபர் ரூ. 57 ஆயிரம் செலுத்த வேண்டும் எனக் கூறினார். இதை நம்பிய சுரேஷ்குமார் ரூ.57  ஆயிரத்தை இணையவழி மூலம் தொடர்புடைய நபருக்கு அனுப்பி னார். ஆனால், சுரேஷ்குமாருக்கு போலி யான பணி நியமன ஆணைக் கடிதம்,  போலி விசா, பயணச்சீட்டு ஆகியவை வந்தன. இது தொடர்பாக ஏமாற்றிய நபரை சுரேஷ்குமார் தொடர்பு கொண்டபோது, அழைப்பைத் துண்டித்துவிட்டார். இதுகுறித்து தஞ்சாவூர் இணைய தளக் குற்றப்பிரிவு காவல் நிலையத் தில் சுரேஷ்குமார் புகார் செய்ததன் பேரில், காவல் துறையினர் வழக்குப் பதிந்து மயிலாடுதுறை மாவட்டம், தில்லைமங்கலத்தைச் சேர்ந்த ஆனந்த ராஜை (38) கைது செய்தனர். இவர்  பல்வேறு நபர்களிடம் வேலை வாங்கித்  தருவதாகக் கூறி ஏமாற்றியது விசா ரணையில் தெரிய வந்தது. இதுபோன்று போலியான நிறுவ னங்களின் விளம்பரங்களைக் கண்டு பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம்  என தஞ்சாவூர் மாவட்ட இணைய தளக் குற்றப்பிரிவு காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து கோரி ஆர்ப்பாட்டம்

புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து கோரி ஆர்ப்பாட்டம் அரியலூர், பிப்.17- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை முன்பு தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பணி யாளர்கள் சங்கங்களின் கூட்டமைப் பினர் ஒருநாள் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், புதிய ஓய்வூ திய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு  பணப் பலன்களை வழங்க வேண் டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகள் வலியுறுத்தப்பட்டன. தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அரியலூர் வட்டாரத் தலைவர் அருள்ஜோதி தலைமை வகித்தார்.

இணைய பயன்பாடு: விழிப்புணர்வு பேரணி

அரியலூர்,பிப். 17- இணைய சேவையை கவனமாக கையாள வேண்டும்  என வலியுறுத்தி அரியலூரில் இணைய குற்றப்பிரிவு காவல்துறை சார்பில் விழிப்புணர்வுப் பேரணி நடை பெற்றது. அரியலூர் அண்ணாசிலை அருகே நடைபெற்ற பேரணியை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் கொடியசைத்து தொடக்கி வைத்தார். பேரணியானது சின்னகடை தெரு, செந்துறை சாலை, ராஜாஜி நகர் வழியாகச் சென்று அரசு கலைக் கல்லூரி  வளாகத்தில் நிறைவடைந்தது. பேரணியில் கலந்து கொண்ட காவல்துறையினர் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர், “இணையதளத்தை கவனமாக கையாள் வோம்; பண ஆசைக்கு மயங்க வேண்டாம்; அறிமுகம் இல்லாதவர்களிடமிருந்து வரக்கூடிய லிங்க்-களை தொட  வேண்டாம்; பெண்கள் மற்றும் சிறுமிகளின் புகைப் படத்தை இணையதளத்தில் பதிவிடுவதை தவிர்ப்போம்” உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய  பதாகைகளை ஏந்தியவாறு முழக்கமிட்டுச் சென்றனர். இணைய குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்கா ணிப்பாளர் அந்தோணி ஆரி, மதுவிலக்கு அமல்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயராகவன், அரிய லூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ்,  காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

குளித்தலை விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வழங்குக! தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆட்சியரிடம் மனு

கரூர், பிப்.17- குளித்தலை ஒன்றிய விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.15  ஆயிரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள் ளது.  இதுதொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள்  சங்கத்தின் குளித்தலை ஒன்றியச் செயலா ளர் பி.சங்கரநாராயணன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேலிடம் மனு கொடுக்கப்பட்டது.  அம்மனுவில், கரூர் மாவட்டம் குளித்தலை  ஒன்றியப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்களது  நிலங்களில் வாழை, நெல், கரும்பு  உள்ளிட்டவற்றை பயிரிட்டு பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில் விவசாயம் செய்து வரு கின்றனர். இந்நிலையில், தற்போது விவசா யத்திற்கு தேவையான அளவு மழையும் பெய்யவில்லை; மேட்டூர் அணையிலிருந்து போதிய தண்ணீரும் கிடைக்கவில்லை. இதனால் கட்டளை மேட்டு வாய்க்கால், தென் கரை வாய்க்கால், நங்கவரம் வாய்க்கால் ஆகிய வாய்க்காலில் போதிய நீர்வரத்து இல்லாததால், நெல் சாகுபடி செய்ய முடியா மல் விவசாயிகள் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளனர்.   மேலும் விதைக்க இயலாமை, விதைப்பு  பொய்த்துப் போதல் போன்ற வழிமுறை களுக்கு பயிர் காப்பீட்டு திட்டம் அமல்படுத்தப் படாததால், விவசாயிகளுக்கு எந்த நிவார ணமும் கிடைப்பதற்கு வாய்ப்புகள் இல்லை.  எனவே கரூர் மாவட்ட நிர்வாகம் உடனடி யாக தலையிட்டு பாதிக்கப்பட்டுள்ள விவ சாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம்  வறட்சி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் குளித்தலை ஒன்றியக் குழு  சார்பில் கேட்டுக் கொள்கிறோம்” என கூறப் பட்டுள்ளது.