districts

img

அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் திறன் மிகு வகுப்பறைகள் திறப்பு விழா

அறந்தாங்கி, ஜூன் 14- புதுக்கோட்டை மாவட்டம்  அறந்தாங்கி அரசினர் பல் வகை தொழில்நுட்பக் கல்லூரியில்  மாணவர்கள் கல்வித் திறனை மேம்படுத் தும் வகையில் திறன்மிகு  வகுப்பறைகள் திறக்கப் பட்டன. இக்கல்லூரியில் முத லாம் ஆண்டு பயிலும் மாண வர்களுக்கான, டிஜிட்டல் ஸ்மார்ட் கிளாஸ் ரூம், இரண்டு திறன்மிகு வகுப்ப றைகள் திறப்பு விழா, 1984-1987 ஆண்டு கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணாக் கர்களின் பங்களிப்போடு நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி  முதல்வர் ச.குமார் தலைமை  வகித்து உரையாற்றினார். துறை தலைவர் செந்தில் குமார் வரவேற்றார். திறன் மிகு வகுப்பறையை பச்ச லூர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முனை வர் வீ.ஜோதிமணி திறந்து வைத்து, கல்லூரியின் 12 வகுப்பறைகளுக்கு அறை குளிரூட்டி, இன்வெர்ட்டர், அலுமினியக் கதவு, ஜன்னல்கள், தாழ்தள கூரை, ஸ்மார்ட் போர்டு, பேட்டரி ஆகிய நவீனமாக்கப்பட்ட வகுப்பறைகளை உரு வாக்கிக் கொடுத்துள்ள முதல் வரின் சிறப்பான செயல் பாடுகளை பாராட்டி சிறப்பு ரையாற்றினார்.  கல்லூரியின் முன்னாள் மாணவர்களான பட்டிமன்ற நடுவர் காசாவயல் குமார், வேம்பையன், சேகர், முரு கேசன் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். 25 -க்கும் மேற்பட்ட மாணாக் கர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.  அனைத்துத் துறை தலை வர்கள், ஊர்வணி ஊராட்சி மன்றத் தலைவர் ஏகாம்பாள் சந்திரமோகன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கல்லூ ரியின் வணிகவியல் துறை  விரிவுரையாளர் செ.பாஸ் கரன் நன்றி கூறினார்.