districts

img

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் திறன்மிகு வகுப்பறை திறப்பு விழா

அறந்தாங்கி,  ஜூலை 2- புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கி அரசினர் பல்வகை தொழில் நுட்பக் கல்லூரியில்  மாணவர்கள் கல்வி திறனை மேம்படுத் தும் வகையில், திறன் மிகு  வகுப்பறை இக்கல்லூரி யில் பயின்ற முன்னாள் மாண வர்களால் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி  முதல்வர் ச.குமார் தலைமை  வகித்து உரையாற்றினார். துறை தலைவர்  சி.செந்தில் குமார் வரவேற்றுப் பேசி னார். 13 மற்றும் 14 ஆவது திறன்மிகு வகுப்பறைகளை  திறந்து வைத்து, பச்சலூர் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முனை வர் வீ.ஜோதிமணி மற்றும் அறந்தாங்கி கட்டுமானப் பொறியாளர் சங்கத் தலை வர் சிராஜுதின் ஆகியோர் பேசினர்.  அப்போது, கல்லூரியில் 14 வகுப்பறைக்கு அறை குளிரூட்டி, இன்வெர்ட்டர், அலுமினியக் கதவு, ஜன்னல்கள், தாழ்தள கூரை,  ஸ்மார்ட் போர்டு, பேட்டரி  ஆகிய நவீனமய மாக்கப் பட்ட வகுப்பறைகளை உரு வாக்கிக் கொடுத்துள்ள கல்லூரி முதல்வரையும் அவருக்கு உறுதுணையாக  இருந்த பேராசிரியர்களை யும் வாழ்த்தினர். அறந்தாங்கி கட்டு மானப் பொறியாளர் சங்க  செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, பொருளாளர் அம்பி காபதி மற்றும் முன்னாள் தலைவர்கள் வாழ்த்திப் பேசி னர்.  கல்லூரியின் அனைத் துத் துறை தலைவர்கள், உடற்கல்வி இயக்குநர், முதல்வரின் நேர்முக உதவி யாளர், அலுவலக பணியா ளர்கள் கலந்து கொண்டனர். கல்லூரியில் பயின்ற முன் னாள் மாணவர்கள் நன்றி கூறினர்.

;