districts

img

அட்சயம் லயன்ஸ் சங்கம் துவக்க விழா

பாபநாசம், ஜூன் 23- பாபநாசம் அட்சயம் லயன்ஸ் சங்கம் துவக்க விழா, சாசனம் வழங்குதல், பணியேற்பு விழா ஆகியவை நடந்தன. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் நடந்த விழாவிற்கு மனோஜ் தலைமை வகித்தார்.  தலைவர் வக்கீல் சரவணன், செயலர் மணி, பொருளாளர் சந்துரு, நிர்வாக அலுவலர் பழனியப்பன், முதல் துணைத் தலைவர் சிவக்குமார், தலைமைப் பண்பு ஒருங்கிணைப்பாளர் ராகுல், சேவைத் திட்ட ஒருங்கிணைப்பாளர் பரணிதரன், இயக்குநர் சிவக்குமார் உள்ளிட்டோரை நிர்வாகிகளாக முதல் துணை ஆளுநர் தேர்வு மணிவண்ணன் பணியில் அமர்த்தினார். சாசன உறுப்பினர்களை மாவட்ட நெறியாளர் முகமது ரபி சங்கத்தில் இணைத்து வைத்தார். மாவட்ட ஆளுநர் இமயவரம்பன் புதிய சங்கத்தை துவக்கி வைத்து, சாசனம் வழங்கி பேசினார்.  ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு அரிசி, அரசு உதவிபெறும் 3 ஒன்றியப் பள்ளிக்கு மின் விசிறி, விவசாயிகளுக்கு மண் வெட்டி உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.