இராமநாதபுரம், ஜூலை 15-
இராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் பேரூராட்சியில் கட்டி முடிக்கப்பட்டு திறக்காத நிலையில் இருக்கும் சந்தை கடைகளை மக்கள் பயன்பாட்டிற்காக பேரூராட்சி வருவாய் அதிகப்படுத்தும் வகையில் ஆடு கோழி விற் பனை சந்தையாக விரிவாக்கிட வேண்டும். அபிராமம் முதுகுளத்தூருக்கு புறவழிச் சாலை அமைத்திட வேண்டும் அபிராமம் 13வது வார்டு சாலை வசதிக்கான டெண்டர் பணிகளை கால தாமதம் இன்றி உடனே துவக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கமுதி தாலுகா குழு சார்பாக அபி ராமத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிளைச் செயலாளர் வீரய்யா தலைமை வகித்தார். தாலுகா செயலாளர் ஏ கண்ணதாசன், மாவட்ட குழு உறுப்பினர் வி.முருகன், ஆர்.முத்துவிஜயன் பேரூராட்சி மன்ற உறுப்பினர் ரவிக்குமார், தாலுகா குழு உறுப்பி னர்கள் பொன்னுச்சாமி பி.கே.முனியசாமி மற்றும் கே. முனியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.