districts

img

விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நீதிமன்ற ஊழியர்க்கு தீவிர சிகிச்சை

கரூர், ஏப்.26 - கடும் மன உளைச்சலால் அரவக் குறிச்சி நீதிமன்றத்துக்குள், நீதிமன்ற ஊழியர் விஷம் குடித்து தற்கொலை முயன்ற நிலையில், அவர் தற்போது கரூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். ஊழியர் விரோத போக்குடன் செயல்பட்ட நீதிபதி மீது நட வடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கரூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை  கொடுத்த பின்பு, செய்தியாளர்களிடம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்டச் செயலாளர் பொன்.ஜெயராம் கூறியதாவது:  கரூர் மாவட்டம், லாலாப்பேட்டை யைச் சேர்ந்தவர் ஆர்.நடராஜன். இவர் அரவக்குறிச்சியில் உள்ள மாவட்ட  உரிமையியல் நீதிமன்றத்தில் டெபுடி நாசர் நிலையில் 6.2.2024 அன்று முதல்  பணிபுரிந்து வருகிறார். அவர் உடல் நலக் குறைவால் தொடர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.  மேற்படி அரவக்குறிச்சி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தின் நீதிபதி  அவர்களால் அவருக்கு உரிய விடுப்பு  அனுமதிக்கப்படாமல் நிராகரிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து மருத்து வக் குழுவிற்கு பரிந்துரை செய்யப் பட்டு, மருத்துவக் குழு அளித்த சான்றி தழ் அடிப்படையில் மீண்டும் பணியில் சேர்ந்து பணியாற்றி வருகிறார்.

அவ ருக்கு உரிய விடுப்பை அனுமதித்து  கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களுக் கான ஊதியத்தை பெற்றுத் தராமல் நீதி பதி காலம் தாழ்த்தி வந்திருக்கிறார்.  மேலும் அலுவலகத்தில், மேற்படி நீதிபதியினால் சம்பந்தப்பட்ட பணியா ளர் கொத்தடிமை போலவும், தீண்டத் தகாதவரை நடத்துவது போலவும் நடத்தி வரப்பட்டிருக்கிறார். இதனால் அலுவலகத்திற்கு வந்து செல்வதற்கு, பேருந்து செலவுக்குக்கூட பணம் இல்லாமல் மிகுந்த சிரமத்திலும், கடும்  மன உளைச்சலிலும் நடராஜன் இருந்து  வந்துள்ளார்.  நீதிபதி முன்பாகவே விஷம் குடித்தார் மன உளைச்சல் காரணமாக நடரா ஜன், ஏப்.25 அன்று நீதிபதி முன்பாகவே அலுவலக வளாகத்திற்குள் பூச்சி மருந்து குடித்து, கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலைக்கு முயன் றுள்ளார். தற்போது, அவர் கரூர்  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.  இவரது தற்கொலை முயற்சிக்கு காரணமான அரவக்குறிச்சி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தின் நீதிபதி மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட பணியாளருக்கு நியா யம் கிடைக்க வேண்டுமென தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில் கோரிக்கை மனு, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மற்றும் மாவட்ட  வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட நீதி பதியின் நேர்முக உதவியாளர் ஆகியோ ரிடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, மதுரை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடமும் கோரிக்கை மனுவை கொடுக்க இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின்  மாநில துணைத் தலைவர் எம்.செல்வ ராணி, மாவட்டத் தலைவர் எம்.எஸ்.அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;