districts

திருச்சி முக்கிய செய்திகள்

நீதிமன்றத்தில்  கண்காட்சி

பெரம்பலூர், பிப்.2 - பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற புகைப்பட கண்காட்சி முகாமினை, பெரம்ப லூர் மாவட்ட சட்டப்பணி கள் ஆணைக் குழுவின் தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஏ.பல்கீஸ் துவக்கி வைத்து பார்வையிட்டார். கண்காட்சியை பெரம்ப லூர் மாவட்ட தனியார்  பள்ளியைச் சார்ந்த 100-க்கும் மேற்பட்ட மாண வர்கள் பார்வையிட்டனர்.

கருத்தரங்கம்

பொன்னமராவதி, பிப்.2 - புதுக்கோட்டை மாவட் டம் பொன்னமராவதி அருகே கொன்னையூரில் “அண்ணல் அம்பேத்க ரும்-இந்திய குடியரசும்” என்ற தலைப்பில் கருத்த ரங்கம் நடைபெற்றது.  கருத்தரங்கிற்கு நான்கு நாடு ஆதிதிரா விடர் ஐக்கிய சங்கத்தின்  தலைவர் கலைமணி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் கரு ணாநிதி வரவேற்புரை யாற்றினார். கோநாடு தலைவர் செல்வம், பொன் மராவதி நாடு தலைவர் சேதுராமன், மேமுக நாடு  தலைவர் அண்ணாமலை அழகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செய லாளர் கரு.வெள்ளை நெஞ்சன், கோநாடு செயலாளர் முருகேசன், பொன்னமராவதி நாடு செயலாளர் கருப்பையா, மேமுக நாடு செயலாளர் சுப்ரமணியன், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பி னர் அன்பு மணவாளன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  கருத்தரங்கத்தில் அம்பேத்கரிய, பெரி யாரிய, மார்க்சிய ஆதர வாளர்கள் பங்கேற்றனர். நான்கு நாடு ஆதிதிரா விடர் ஐக்கிய சங்கத்தின்  பொருளாளர் சந்திர சேகரன் நன்றி கூறினார்.

தமிழ்ப் பல்கலை.யில் மார்ச் இறுதிக்குள் நாட்டுப்புற அருங்காட்சியகம்

தஞ்சாவூர், பிப்.2- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், மார்ச் இறுதிக்குள் நாட்டுப்புற அருங்காட்சியகத்தை உருவாக்குவது என வியாழனன்று நடைபெற்ற வல்லுநர்கள் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் வியாழக்கிழமை நடை பெற்ற இக்கூட்டத்துக்கு துணைவேந்தர் (பொ) க.சங்கர் தலைமை வகித்தார். பதிவாளர் (பொ) கோ.பன்னீர்செல்வம், அருங்காட்சியக அறிஞர் சி.மகேஸ்வரன், பேராசிரியர் ஒ.முத்தையா, முனைவர்கள் செந்தமிழ்ப்பாவை, ச.கவிதா, வீ.செல்வகுமார், பெருமாள், ஆறுமுக சீதாராமன், மாலதி, நிதி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, கோட்டப் பொறி யாளர் விஜயன், மக்கள் தொடர்பு அலுவலர் (பொ) இரா.சு.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், மார்ச் இறுதிக்குள் நாட்டுப்புற அருங்காட்சிய கத்தை உருவாக்குவது, இதில் வேளாண் புழங்கு பொருள்கள், நாட்டுப்புற தெய்வ வடிவங்கள், கலை, கைவினைப் பொருள்கள் போன்றவற்றைக் காட்சிப்படுத்துவது, பொதுமக்களிடம் பயன்படாத பழமையான பொருள்களைச் சேகரித்துக் காட்சிப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழமையான அரிய பொருள்களை  நாட்டுப்புற அருங்காட்சியகத்திற்கு வழங்கலாம். இதுகுறித்து தொடர்பு எண்: 8608886260, 9361986201இல் தகவல் தெரிவிக்கலாம். முன்னதாக, நாட்டுப்புறவியல் துறைத் தலைவர் இரா.காமராசு வர வேற்றார். முனைவர் சீ.இளையராஜா நன்றி கூறினார்.

த.பே.மா.லு கல்லூரியின் முன்னாள் பேராசிரியர்கள், ஊழியர்கள் கவுரவிப்பு

மயிலாடுதுறை, பிப்.2 - மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகிலுள்ள பொறையார் த.பே.மா.லு கல்லூரியில், கல்லூரி தொடங்கியதிலிருந்து பணியாற்றி  ஓய்வுபெற்ற முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் பல்வேறு நிலை களில் பணியாற்றிய ஊழியர்கள் என 65-க்கும் மேற்பட்டோர் கவுரவிக்கப் பட்டனர். இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஜான்சன் ஜெயக்குமார் தலைமை வகித்தார். தொடர்ந்து அனைவரும் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். தமிழ் சுவிசேஷ லுத்த ரன் திருச்சபையின் பேராயரும், கல்லூரியின் செயலருமான முனைவர்  கிறிஸ்டியன் சாம்ராஜ் சிறப்புரையாற்றினார். பொறையார் பெத்லேகம் ஆலய ஆயர் ஜான்சன் மான்சிங், கல்லூரியின் அனைத்து துறை தலை வர்கள், பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

நாதக கட்சியை இடைத்தேர்தல் பணிகளிலிருந்து நீக்க வலியுறுத்தல்

ஈரோடு, பிப்.2- நாம் தமிழர் கட்சியினர் வன்முறையில் ஈடு படுவார்கள் என்பதால், அக்கட்சியை இடைத் தேர்தல் பணிகளில் இருந்து நீக்குவதற்கு தேர் தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண் டும் என தபெதிக பொதுச்செயலாளர் கு.ராம கிருட்டிணன் வலியுறுத்தியுள்ளார். ஈரோடு, பன்னீர்செல்வம் பூங்கா பகுதி யில் திமுக வேட்பாளர் சந்திரகுமாருக்கு ஆத ரவாக ஞாயிறன்று, தந்தை பெரியார் திராவிட  கழகத்தினர் இடைத்தேர்தல் பிரச்சார நோட் டீஸ் விநியோகம் செய்தனர். அப்போது அந்த  நோட்டீஸில் சீமானை தவறாக சித்தரித்துள்ள தாக கூறி, நாம் தமிழர் கட்சியினர் தபெதிக- வினர் மீது தாக்குதல் நடத்தினர். இச்சம்பவம்  தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த  தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட் டிணன், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், திமுக வேட்பாளரை ஆதரித்து, எங்கள் அமைப்பினர் துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சா ரம் செய்து கொண்டிருந்தனர். அப்போது,  அங்கு வந்த நாதகவினர் அராஜகமாக, எங்க ளது நிர்வாகிகளை தாக்கி, துண்டறிக் கையை பறித்து, கிழித்துள்ளனர். இது ஒரு  திட்டமிட்டு செய்த செயல். மேலும், தேர்த லில் நாதகவினர் வெற்றி பெற முடியாது என்ற  நிலை ஏற்பட்டுள்ளதால், அதன் விரக்தியில் சீமானும் பேசி வருவதோடு, அவரது கட்சியி னர் தேர்தலை அமைதியாக நடத்த விடுவார் களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எங்கள்  நிர்வாகிகளை தாக்கியவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் பிரச்சா ரம் நிறைவடைய உள்ளதால், நாம் தமிழர் கட் சியினர் வன்முறையில் ஈடுபடுவார்கள் என் றும், இதனால் தேர்தல் ஆணையம் நாதகவி னர் மீது நடவடிக்கை எடுத்து அக்கட்சியை தேர்தல் பணிகளில் இருந்து நீக்க வேண்டும்,  என்றார்.