districts

இல்லம் தேடி கல்வி திட்டம்

தஞ்சாவூர், டிச.3 - தஞ்சாவூர் அருகே, மானோஜிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சார்பில் இல்லம் தேடிக் கல்வித் திட்டம் கபிலன் நகர் மைய துவக்க நிகழ்வு நடை பெற்றது.  பள்ளி தலைமை ஆசிரியர் அந்தோணி பிரான் ஸிஸ் தலைமை வகித்தார். தஞ்சாவூர் நீலகிரி பஞ்சா யத்து தலைவர் ஆர்.எம். பாஸ்கரன், துணைத் தலை வர் சண்.சரவணன், வார்டு  உறுப்பினர்கள் ஜெ.சர வணன், செந்தில், திருவள்ளு வர் குடியிருப்போர் சங்கத் தலைவர் கருணாகரன், நிர்வாகிகள் பேராசிரியர் பாஸ்கரன், பொறியாளர் மதியரசு, வட்டார வளமைய பொறுப்பு ஆசிரியர் அசோக்,  மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் சிறப்பித்தனர்.