பொன்னமராவதி, ஜூன் 18-
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீயானி. இவர் தனது குழந்தைகளின் பள்ளி படிப்புக்கு தேவையான உதவிகளைப் சிலரிடம் கேட்டுப் பெறுவதற்காக பொன்னமராவதிக்கு பேருந்தில் வந்துள்ளார். அப்போது பேருந்தில் பயணம் செய்த பொன்னமராவதி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் பக்ருதீனிடம் உதவி குறித்து கூறியிருக் கிறார். அதைத்தொடர்ந்து பக்ருதீனின் முன்முயற்சியில் பொன்னமராவதி பி.உசிலம்பட்டி ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ஆனந்த் மற்றும் பாலு ஸ்டுடியோ ஆறுமுகம் ஆகியோர் மூலமாக ஸ்ரீயானிக்குத்தேவையான பள்ளிப் பாடநோட்டுகள், சீருடைகள், பேக் ஆகியவற்றை வழங்கினர்.