districts

img

புதிய பேருந்து நிலையம்: அடிக்கல் நாட்டு விழா

திருத்துறைப்பூண்டி, நவ.26 - திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி நகராட்சிக்கு சொந்தமான பேருந்து நிலையத்தை நவீன முறையில் மேம்படுத்த வேண்டுமென திருத்துறைப்பூண்டி சட்ட மன்ற உறுப்பினர் க.மாரிமுத்து சட்டமன்றத் தில் கோரிக்கை வைத்தார். அதன் அடிப்படையில் நகராட்சி நிர்வாகத் துறை மானிய கோரிக்கை எண்:34-ல் அறி விப்பு வெளியிடப்பட்டது. ஏற்கனவே இப்பே ருந்து நிலையம் ஒரே நேரத்தில் 11 பேருந்து களை நிறுத்தக்கூடிய அளவில் ‘சி’ கிரே டாக இருந்தது. தற்போது 25 பேருந்துகளை நிறுத்தும் வசதியுடன் ‘பி’ கிரேடாக மேம்படுத்தப்பட உள்ளது. இதன்படி கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு  திட்டத்தில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் புதிய  பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டு  விழா நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்  க.மாரிமுத்து, நகர்மன்ற தலைவர் கவிதா  பாண்டியன் ஆகியோர் தலைமை வகித்தார்.  நகராட்சி ஆணையர் பிரதான்பாபு, நகர்மன்ற  துணைத் தலைவர் ஜெயபிரகாஷ், நகராட்சி பொறியாளர், அலுவலக ஊழியர்கள், நகர் மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர்.