இன்று குறைதீர் கூட்டம்
புதுக்கோட்டை, அக்.4 - புதுக்கோட்டை மின் பகிர்மான வட்டம் மேற் பார்வை பொறியாளர் ஜி.சேகர் தலைமையில் புதுக்கோட்டை, இலுப் பூர் மற்றும் கந்தர்வ கோட்டை பகுதிக்கான மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் அக்.5 (வியாழன்) அன்று காலை 10.30 மணி முதல் 1 மணி வரை செயற்பொ றியாளர், இயக்குதலும்-காத்தலும் புதுக் கோட்டை அலுவல கத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் மேற் பார்வை பொறியாளரை நேரில் சந்தித்து மின்வா ரியம் சம்பந்தமான குறை களை தெரிவித்து, தீர்வு காணலாம் என புதுக் கோட்டை இயக்குதலும் காத்தலும் செயற்பொறி யாளர் ஆ.முருகன் தெரி வித்துள்ளார்.
பருத்தி ஏலம்
பாபநாசம், அக்.4 - தஞ்சாவூர் விற்ப னைக் குழு, பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலம் அருகே கீழக் கொட்டை யூர் ஒழுங்குமுறை விற்ப னைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. ஏலத்திற்கு ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்கா ணிப்பாளர் பிரியமாலினி முன்னிலை வகித்தார். ஏலத்தில் கும்பகோ ணம் மற்றும் இதைச் சுற்றி யுள்ள கிராமங்களில் இருந்து 637 விவசாயிகள் சராசரியாக 600 குவிண் டால் பருத்தி எடுத்து வந்தனர். ஏலத்தில் கும்ப கோணம், பண்ருட்டி, விழுப்புரம், சேலம், திருப் பூர் உள்ளிட்ட பகுதி களைச் சேர்ந்த 7 வணி கர்கள் கலந்து கொண்டு, அதிகபட்சம் குவிண்டா லுக்கு ரூ.7069, குறைந்த பட்சம் ரூ.5509, சராசரி ரூ.6169 என விலை நிர்ண யம் செய்தனர். பருத்தி யின் மதிப்பு சராசரி ரூ.36 லட்சம்.
தீத்தடுப்பு ஒத்திகை
தஞ்சாவூர், அக்.4 - கலைஞர் நூற் றாண்டு விழாவை முன் னிட்டு, தஞ்சாவூர் மாவட் டம் பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில், நாட்டு நலப் பணித் திட்ட மாணவி களுக்கு தீத்தடுப்பு போலி ஒத்திகை, பயிற்சி மற்றும் வடகிழக்குப் பருவமழை பேரிடர் மேலாண்மை பயிற்சி நடத்தப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையிலான, வீரர் கள் மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர். முன்ன தாக, பள்ளி தலைமை ஆசிரியர் தனலட்சுமி வர வேற்றார்.
பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
அரியலூர், அக்.4 - ராபி மற்றும் நெல் பயிருக்கு காப்பீடு செய்து பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆட்சியர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவிக்கையில், ஒன்றிய அரசின் புதிய வழிகாட்டுத லின்படி திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2023-2024 ஆம் ஆண்டில் ராபி மற்றும் சிறப்பு பருவங்களுக்கு அரியலூர் மாவட்டத்தில் “யுனிவர்சல் சோம்ப்போ ஜெனரல் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்” என்ற முகமை யின் மூலம் இத்திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இதன்கீழ் சிறப்பு பருவத்தில், நெல்-II, பருத்தி-II, மக்காச்சோளம்-II ஆகிய பயிருக்கு ஆண்டிமடம், குவா கம், குண்டவெளி, உடையார்பாளை யம், தா.பழூர், சுத்தமல்லி, அரியலூர், நாகமங்கலம், ஏலாக்குறிச்சி, கீழப் பழூர், மாத்தூர், செந்துறை, நாகமங்கலம், பொன்பரப்பி, ஜெயங்கொண்டம், திரு மானூர், ஆர்.எஸ்.மாத்தூர் ஆகிய பிர் காக்களிலும் பயிர் காப்பீடு செய்ய அர சால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ராபி பருவத்தில் உளுந்து பயி ருக்கு காப்பீடு செய்து கொள்ளவும் அரசால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே பருத்தி பயிருக்கு அக்.31 வரையிலும், நெல் மற்றும் மக்காச்சோ ளம் பயிருக்கு நவ.15 வரையிலும், உளுந்து பயிருக்கு நவ.30 வரையிலும், நிலக்கடலை பயிருக்கு பிப்.15 வரை யிலும் விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம். விவசாயிகள் பொது சேவை மையத்திலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க சேவை மையங்கள் மற்றும் தேசியமயமாக்கப் பட்ட வங்கிகளிலும் காப்பீடு செய்ய லாம். இது தொடர்பான விபரங்களுக்கு, வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் என்றார்.
கரூரில் சிறப்பு கால்நடை சுகாதார முகாம்கள்
5 மாதங்களுக்கு நடக்கிறது கரூர், அக்.4 - கரூர் மாவட்டம், கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் 2023-2024 ஆம் ஆண்டிற் கான சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப் புணர்வு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இம்முகாம்கள் ஒரு ஊராட்சி ஒன்றியத் திற்கு 20 முகாம்கள் வீதம், ஒரு மாதத்திற்கு 5 முகாம்கள் என (அக்டோபர் 2023 முதல் பிப்ரவரி 2024 வரை) 5 மாதங்களுக்கு நடத்தப்பட உள்ளது. முகாம்களில் நோய் வாய்ப்பட்ட கால் நடைகளுக்கு சிகிச்சையளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப் பூசி போடுதல், ஆண்மை நீக்கம் செய்தல், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள், சினை ஆய்வு, சுண்டுவாத அறுவை சிகிச்சை போன்ற சிறு அறுவை சிகிச்சைகள் மற்றும் கருப்பை மருத்துவ சிகிச்சைகள் உள்ளிட்ட நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் சுகாதார நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு வழங்கப்படவுள்ளது. மேலும், சிறந்த கால்நடை வளர்ப்பு முறை களைப் பின்பற்றும் மூன்று விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கப்படும். கிடேரி கன்று பேரணி நடத்தப்பட்டு சிறந்த 3 கன்று உரிமை யாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம்
மன்னார்குடி, அக்.4 - அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம், தேசிய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் இணைந்த கூட்டுப் போராட்டக் குழுவின், மூன்றாம் கட்ட நாடு தழுவிய வேலை நிறுத்தம் போராட்டம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் புதனன்று நடைபெற்றது. மன்னார்குடி தலைமை அஞ்சலகம் எதிரில் நடை பெற்ற போராட்டத்திற்கு கிளைத் தலைவர் ஆர்.மனோ கரன், கிளைச் செயலாளர் ஜி.பக்கிரிசாமி, பொருளாளர் வி. எழிலரசி ஆகியோர் தலைமை வகித்தனர். கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு எட்டு மணி நேர வேலை உத்தரவாதம், ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகை களை வழங்க வேண்டும். கமலேஷ் சந்திரா கமிட்டி பரிந்துரைப்படி பணபலத்துடன்கூடிய மூன்று கட்ட பதவி உயர்வு வழங்க வேண்டும். பணிக்கொடை ரூ.5 லட்சம், 180 நாட்கள் சேமிப்பு விடுப்பு, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். பணியின் போது மரணமடைந்த ஊழி யர்களின் வாரிசுகளுக்கு, நிபந்தனையின்றி கருணை அடிப் படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடைபெற்றது. அரியலூர் அரியலூர் அஞ்சல் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் கோட்டத் தலைவர் என்.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயல் தலைவர் வி.ஜெயக்குமார், கோட்டச் செயலர் கே.மருத முத்து, பொருளாளர் ஏ.பரமசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மருத்துவக் கண்காட்சி
பொன்னமராவதி, அக்.4 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி துர்கா மருத்துவமனையின் 30 ஆம் ஆண்டு விழா மற்றும் மருத்து வக் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது. கண்காட் சிக்கு பொன்னமராவதி காவல் ஆய்வாளர் எம்.ரமேஷ் தலைமை வகித்தார். தீயணைப்பு நிலைய அலுவலர் ரா. மணிகண்டன் முன்னிலை வகித்தார். தலைமை மருத்து வர் ஆ.அழகேசன் வரவேற்றார். கண்காட்சி அரங்கு களை மருத்துவர்கள் திறந்து வைத்தனர். மரு.டி.ரஜினி, பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்காட்சி யைப் பார்வையிட்டனர்.
ஆற்றூரில் மின்சாரம் தாக்கி மூவர் பலி கர்ப்பிணி ஆதிரா உடல் கணவரிடம் ஒப்படைப்பு
திருவட்டார், அக். 4- கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் அருகே மின்சாரம் தாக்கி உயிரி ழந்த மூவரின் உடல்களும் உடற்கூராய்வு செய்து உற வினர்களிடம் ஒப்படைக்கப் பட்டன. கர்ப்பிணியான ஆதி ராவின் உடலை பெற்றுக் கொண்ட கணவனின் கதறல் அனைவரையும் உலுக்கியது. பக்கத்து வீட்டு இரும்புக் கூரை மீது பாய்ந்த மின்சா ரம் தாக்கியதில் செவ்வா யன்று மாலை ஜெயசித்ரா (45) இவரது மகன் அஸ்வின் (21), மகள் ஆதிரா(24) ஆகி யோர் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் ஆசா ரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் உடற்கூராய்வு செய் யப்பட்டது. புதன்கிழமை ஆதிராவின் உடலை கணவர் ஸ்ரீசுதன் பெற்றுக் கொண்டு கதறி அழுத காட்சி அனைவரையும் கதி கலங்க வைத்தது. பின்னர் அவரது சொந்த ஊரான குளச்சல் பகுதிக்கு கொண்டு சென்று அவரது இல்லத்தில் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது. ஜெயசித்ரா மற்றும் அஸ்வின் உடல்கள் ஆற்றூ ருக்கு கொண்டுவரப்பட்டு அவர்களது இல்லத்தில் இறுதி நிகழ்ச்சி நடை பெற்றது. இந்நிகழ்ச்சி யில் மக்கள் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை; கும்பகோணம் இ-சேவை மையம் முற்றுகை
கும்பகோணம் அக்டோபர் 4 மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப் பித்து, தொகை கிடைக்காத நூற்றுக்கும் மேற்பட் டோர் கும்பகோணம் தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தை முற்றுகை யிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை கடந்த செப்.15 அன்று முதல்வர் துவக்கி வைத்தார். விண்ணப்பம் செய்திருந்தவர்களில் பலருக்கு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகவும், ஒரு சிலருக்கு ஆவ ணங்கள் இணைக்கப்படவில்லை என்றும், சிலருக்கு 1 ரூபாய் மட்டும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டும் இருந்தது. மேலும் பலருக்கு வங்கிக் கணக்கில் ஆதார், பான் கார்டு இணைக் காதது, வங்கி கணக்கே இல்லாதது என பல கார ணங்களால் தொகை வழங்கப்படாமல் இருந்தது. இதற்காக கடந்த செப்.17 முதல் அனைத்து தாலுகா அலுவலகங்கள், ஆர்.டி.ஓ. அலுவ லகத்தில் மேல்முறையீட்டுக்கு தனி உதவி மைய மும், ஆலோசனை மையமும் செயல்படுகிறது. இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை முதல் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உரிமைத் தொகைக்காக கும்பகோணம் தாலுகா அலுவ லகம் வந்தனர். காலை 10:30 மணியளவில் இ-சேவை மையம் திறக்கப்பட்ட நிலையில், சர்வர் வேலை செய்யவில்லை என்று கூறிய தால் பெண்கள் இ-சேவை மையத்தை முற்று கையிட்டனர். இதுகுறித்து பெண்கள் தெரிவிக்கையில், ‘பணக்காரர்கள் அக்கவுண்ட்டில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. ஆனால் நாங்கள் இ-சேவை மையத்தை தொடர்பு கொண்டால், இது சரியில்லை; அது சரியில்லை என்று அலைக்கழிக்கின்றனர்’ என்றனர் ஆதங்கத் துடன். தொடர்ந்து கோட்டாட்சியர் பூர்ணிமா, வட்டாட் சியர் வெங்கடேஸ்வரன், காவல்துறை ஆய்வா ளர் அழகேசன் ஆகியோர் அங்கு கூடியிருந்த பெண்களை சமாதானப்படுத்தி, தகுதியான அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப் படும் என தெரிவித்தனர்.
அக்.7 பெரம்பலூரில் நெடுந்தூர ஓட்டப் போட்டி
பெரம்பலூர், அக்.4 - தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பெரம்பலூர் மாவட்ட அளவி லான அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப் போட்டிகள் சனிக்கிழமை (அக்.7) அன்று காலை 7.30 மணியளவில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்திலிருந்து துவங்க உள்ளது. போட்டிகள் 17 வயது முதல் 25 வயதிற் குட்பட்ட ஆண்களுக்கு - 8 கி.மீ தூரமும், பெண் களுக்கு - 5 கி.மீ தூரமும் நடத்தப்பட உள்ளது. 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு - 10 கி.மீ தூரமும், பெண்களுக்கு - 5 கி.மீ தூர மும் நடைபெறும். போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் வயது சான்றிதழ் மற்றும் பதிவுபெற்ற மருத்துவரிடமிருந்து உடற் தகுதிச் சான்று பெற்று வருதல் கட்டாயம். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிப்ப வராக இருந்தால், பள்ளி-கல்லூரிகளில் படிப் பதற்கான சான்றிதழ் கொண்டு வர வேண் டும். போட்டிகள் நடப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே, போட்டி நடைபெ றும் இடத்திற்கு வர வேண்டும். போட்டியில் கலந்து கொள்பவர்கள் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் தங்களது பெயரை, வயது சான்றிதழ், மருத்துவரின் தகுதிச் சான்றிதழ் மற்றும் ஆதார் கார்டு நகலுடன் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மருத்துவ முன்னெச்சரிக்கைகள் மற்றும் அறிவிப்பு படிவத்தில் எழுத்து மூலமான ஒப்புதலை மாவட்ட விளையாட்டு அலுவல ரிடம் சமர்ப்பித்த பின்னரே போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000, 2 ஆம் பரிசாக ரூ.3,000, 3 ஆம் பரிசாக ரூ.2,000, 4 முதல் 10 இடங்களில் வெற்றி பெறு பவர்களுக்கு தலா ரூ.1000 என ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே காசோலை யாக வழங்கப்படும் என ஆட்சியர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
நூறுநாள் வேலை நிலுவை ஊதியம் கோரி அக்.11இல் ஆர்ப்பாட்டம்
அரியலூர், அக்.4- அரியலூர் மாவட்டம் தா. பழூரில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க அரியலூர் மாவட்டக் குழு கூட்டம், மாவட்டத் தலைவர் சி.ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வி.தொ.ச. மாவட்டச் செய லாளர் ஏ.கந்தசாமி, மாவட்டக் குழு உறுப்பி னர்கள், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஜெ.இராதா கிருஷ்ணன், மாவட்டச் செய லாளர் எம்.இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்ட னர். நூறு நாள் வேலையில் நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி, அக்.11 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடத்துவது. டிசம்பர் மாதம் தில்லியில் நடைபெறும் போராட்டத்தில் திரளாக கலந்து கொள்வது. தில்லி யில் கட்டப்படும் விவசாயத் தொழிலாளர் சங்க கட்டி டத்திற்கு நிதி வசூல் செய்வது. பட்டியல் இன மக்கள் பழங்குடியின மக்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக கை யெழுத்து இயக்கம் நடத்து வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
இலவச மனைப் பட்டா கேட்டு மனு
அரியலூர், அக்.4- அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகேயுள்ள குறிச்சி கிராம மக்கள், தங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு அரியலூர் ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர். அவர்கள் அளித்த மனுவில், “சோழமாதேவி ஊராட்சிக் குட்பட்ட குறிச்சி கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அரசுத் தொகுப்பு வீட்டில் வசித்து வருகிறோம். தற்போது ஒரு வீட்டில் மூன்று, நான்கு குடும்பமாக இருப்பதால், இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது தொகுப்பு வீடு கள் அனைத்தும் பழுதடைந்துள்ளன. இதனை சீரமைப்ப தற்கான நிதி எங்களிடம் இல்லை. எனவே ஆட்சியர், எங்க ளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும். எங்க ளது கிராமத்துக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.
வாலிபர் தற்கொலை
திருநெல்வேலி, அக். 4- திருநெல்வேலி மாவட்டம், பாளை கே.டி.சி. நகரை அடுத்த முறப்பநாடு அருகே ஆறாம்பண்ணை வேதக்கோ வில் தெருவை சேர்ந்தவர் சுடலை. இவரது மகன் சுப்பிர மணி ( 32). இவருக்கு திருமணமாகி சிவகாமி என்ற மனைவி யும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். சுப்பிரமணிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனை அவரது குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவில் சுப்பிர மணி அங்குள்ள டிரான்ஸ்பார்மர் மீது ஏறி, மின் கம்பியை பிடித்தபோது வீசப்பட்டார். கீழே விழுந்து மயங்கிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக் காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இச்சம்பவம் குறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அக்.7 பெரம்பலூரில் நெடுந்தூர ஓட்டப் போட்டி
பெரம்பலூர், அக்.4 - தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பெரம்பலூர் மாவட்ட அளவி லான அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப் போட்டிகள் சனிக்கிழமை (அக்.7) அன்று காலை 7.30 மணியளவில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்திலிருந்து துவங்க உள்ளது. போட்டிகள் 17 வயது முதல் 25 வயதிற் குட்பட்ட ஆண்களுக்கு - 8 கி.மீ தூரமும், பெண் களுக்கு - 5 கி.மீ தூரமும் நடத்தப்பட உள்ளது. 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு - 10 கி.மீ தூரமும், பெண்களுக்கு - 5 கி.மீ தூர மும் நடைபெறும். போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் வயது சான்றிதழ் மற்றும் பதிவுபெற்ற மருத்துவரிடமிருந்து உடற் தகுதிச் சான்று பெற்று வருதல் கட்டாயம். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிப்ப வராக இருந்தால், பள்ளி-கல்லூரிகளில் படிப் பதற்கான சான்றிதழ் கொண்டு வர வேண் டும். போட்டிகள் நடப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே, போட்டி நடைபெ றும் இடத்திற்கு வர வேண்டும். போட்டியில் கலந்து கொள்பவர்கள் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் தங்களது பெயரை, வயது சான்றிதழ், மருத்துவரின் தகுதிச் சான்றிதழ் மற்றும் ஆதார் கார்டு நகலுடன் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மருத்துவ முன்னெச்சரிக்கைகள் மற்றும் அறிவிப்பு படிவத்தில் எழுத்து மூலமான ஒப்புதலை மாவட்ட விளையாட்டு அலுவல ரிடம் சமர்ப்பித்த பின்னரே போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000, 2 ஆம் பரிசாக ரூ.3,000, 3 ஆம் பரிசாக ரூ.2,000, 4 முதல் 10 இடங்களில் வெற்றி பெறு பவர்களுக்கு தலா ரூ.1000 என ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே காசோலை யாக வழங்கப்படும் என ஆட்சியர் கற்பகம் தெரிவித்துள்ளார்.