districts

img

மேளதாளத்துடன் மாணவர்களை வரவேற்ற ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி

புதுக்கோட்டை, ஜூன் 14-

     புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்  பள்ளியில் எல்கேஜி முதல் 11-ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெற்று வரு கிறது.  

    இந்நிலையில், 2023-24 ஆம் கல்வி  ஆண்டுக்கான பள்ளி துவக்க நாளில்  எஸ்கேஜி வகுப்பில் சேர்ந்த மாணவர் களுக்கு பலூன் தோரணங்கள் கட்டி, மேள தாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்  பட்டது.

   எல்கேஜி மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி மாலை  அணிவித்து வரவேற்றார்.

   நிகழ்வில், பள்ளி யின் மேலாண்மை இயக்குனர் நிவேதிதா மூர்த்தி, துணை முதல்வர் குமாரவேல் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரி யர்கள் பங்கேற்றனர்.