districts

கல்லணையை சுகாதாரமாக பராமரிக்க சிபிஎம் வேண்டுகோள்

திருச்சிராப்பள்ளி, மே 10-

   விடுமுறை காலங்களில்  பள்ளி, கல்லூரி மாணவர்  கள்,  சிறுவர்கள் பெரியவர்கள் என பொதுமக்கள் அனை வரும் கல்லணைக்கு வருகை தருகிறார்கள். ஆனால் கல்ல ணையின் பெரும்பாலான பகுதிகளில் ஆங்காங்கே மது பாட்டில்கள், குப்பைகள் குவிந்துள்ளன. பராமரிப்புகள் இல்லாததால் சுகாதாரச் சீர்கேடு நிறைந்துள்ள பகுதி யாக காட்சியளிக்கின்றது.

   எனவே, சம்பந்தப்பட்ட துறையை அதிகாரிகள்  உடனடி யாக நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றி சுகாதா ரமாக பராமரித்து தொற்றுநோய் பரவாமல் தடுக்க வேண்  டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட மேற்கு பகுதி செயலாளர் ரபீக் அகமது தெரிவித்துள்ளார்.