districts

img

காசநோய் கண்டறியும் முகாம்

பாபநாசம்,ஜன.8-                       தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை அருகே கோவிந்த நாட்டுச்சேரி ஊராட்சி, புத்தூர் ஊராட்சி மன்ற வளாகத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நடமாடும் மருத்துவக் குழுவின் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி மூலம் காசநோய்  கண்டறியும் முகாம் நடைபெற்றது.  முகாமை முன்னாள் ஊராட்சித் தலைவர் ஜெய்சங்கர் தொடங்கி வைத்தார். வீரமாங்குடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் குலசேகர பாண்டியன், காசநோய் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் தெய்வீகன், உள்ளிட்டோர் கிராம மக்களை பரிசோதித்தனர். இதில் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனர்.  ஊராட்சி செயலர் முருகையன் நன்றி கூறினார்.