தஞ்சாவூர், செப்.6 - சேதுபாவா சத்தி ரம் ஆசிரியைக்கு சென் னையில் நடைபெற்ற விழாவில் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட் டம், சேதுபாவா சத்திரம் ஒன்றியம் கழு மங்குடா ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்று பவர் கி.ஷஜிதா. இவர் தமிழ்நாடு அரசின் டாக்டர் இராதா கிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், செப்.5 அன்று சென்னையில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் தலைமை ஆசிரியை கி.ஷஜிதாவுக்கு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி, தமிழ்நாடு அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லா சிரியர் விருதுக்கான சான்றிதழ் மற்றும் பதக்கத்தை வழங்கி னார். விருது பெற்ற ஆசிரியை ஷஜிதாவிற்கு, சேதுபாவா சத்திரம் வட்டாரக் கல்வி அலுவலர் எஸ்.சிவசாமி உள்ளிட் டோர் வாழ்த்து தெரிவித்தனர்.