districts

img

கரூர் பரணி பார்க் பள்ளியில் வெள்ளி விழா, தங்க நட்சத்திர விருது வழங்கும் விழா

கரூர், ஜன.24 -  பரணி பார்க் பள்ளியில் 25 ஆவது ஆண்டு வெள்ளி விழா மற்றும் தங்க நட்சத்திர விருது வழங்கும் விழா நடைபெற்றது.  விழாவிற்கு பரணி பார்க் கல்விக் நிறுவனங்களின் தாளாளர் எஸ்.மோகன ரெங்கன், செயலர் பத்மா வதி மோகனரெங்கன் ஆகி யோர் தலைமை வகித்தனர். பரணி பார்க் கல்விக் குழும அறங்காவலர்கள் சுபாஷினி அசோக் சங்கர், வனிதா, அருண்விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீசங்கர வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியின் தாளாளர் அசோக் சங்கர் சிறப்புரையாற்றினார். இதற்கான ஏற்பாட்டை பரணி பார்க் கல்விக் குழும  முதன்மை முதல்வர்  முனைவர் சி.ராமசுப்ரமணி யன் தலைமையில், பரணி  பார்க் பள்ளி முதல்வர்  கே.சேகர், துணை முதல்வர் கள் ஜி.நவீன்குமார், கே.மகா லட்சுமி, பி.ரேணுகாதேவி, ஒருங்கிணைப்பாளர்கள் வி.பானுப்பிரியா, எ.கணே சன், என்.செல்வசங்கீதா மற்றும் இருபால் ஆசிரி யர்கள் செய்திருந்தனர். படிப்பு, விளையாட்டு, இலக்கியம், நடனம், பட்டி மன்றம், அறிவியல் ஆராய்ச்சி, யோகா போன்ற  பல்வேறு பிரிவுகளில் சர்வதேச, தேசிய சாதனை கள் படைத்த 148 மாண வர்கள் மற்றும் ஆசிரியர் களுக்கு தங்க நட்சத்திர விருது வழங்கிப் பாராப் டப்பட்டது. இதைத்தொடர்ந்து மாண வர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  விழாவில் பரணி பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பரணி வித்யாலயா சி.பி.எஸ்.இ பள்ளி, எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.