districts

img

பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்குக!-சிஐடியு ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, அக்.27 - தமிழ்நாடு அரசு போக்கு வரத்து, மின்சாரம், குடிநீர், டாஸ் மாக், கூட்டுறவு உள்ளிட்ட மாநில  பொதுத்துறை நிறுவன தொழிலா ளர்களுக்கு போனஸ் வழங்குவது தொடர்பாக, தொழிற்சங்க தலைவர் களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீபாவளி பண்டிகை கால போனசை உடனே அறிவிக்க வேண் டும். கொரோனா காலத்திற்கு முன்  இருந்ததைவிட கூடுதல் போனஸ்  வழங்க வேண்டும் என வலியுறுத்தி  சிஐடியு பொதுத்துறை ஊழியர்  சங்கங்கள் சார்பில் வியாழனன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் சீனி வாசன் தலைமை வகித்தார். ஆர்ப் பாட்டத்தை விளக்கி சிஐடியு மாநகர்  மாவட்டச் செயலாளர் ரெங்கரா ஜன், அரசு போக்குவரத்து மாணிக் கம், மின்சாரம் நடராஜன், அரசு விரைவு போக்குவரத்து ஜெய ராமன், குடிநீர் வடிகால் வாரிய மருதைராசு, சிவில் சப்ளை தீனத யாளன், ஆவின் அருண், கூட்டுறவு  வின்சென்ட் ஆகியோர் பேசினர்.  திருவாரூர் சுமைப் பணி தொழிலாளர் களுக்கும் சட்டப்படியான தீபாவளி  போனஸ் வழங்க வேண்டும். தொழி லாளர்களுக்கு அடையாள அட்டை  வழங்க வேண்டும். மூட்டை சிப்பத் திற்கு ரூ.30 வழங்க வேண்டும்  என வலியுறுத்தி திருவாரூர் முது நிலை மண்டல மேலாளர் அலுவல கம் முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு சுமைப்பணி தொழிலா ளர் சங்க மாவட்டச் செயலாளர் கே. கஜேந்திரன் தலைமை வகித்தார். சிஐடியு மாநிலச் செயலாளர் சி.திரு வேட்டை, அமைப்பின் சம்மேளன பொதுச் செயலாளர் ஆர்.அருள் குமார், சிஐடியு மாவட்ட செயலா ளர் டி.முருகையன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். அரியலூர் தமிழக அரசு அனைத்து தொழிற் சங்கங்களையும் அழைத்துப் பேசி, தீபாவளி பண்டிகை கால  போனஸ் 20 சதவீதம் என அறிவிக்க  வேண்டும் என வலியுறுத்தி அரிய லூர் அண்ணா சிலை அருகே, சிஐடியு-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். சிஐடியு மாவட்டத் தலை வர் கே.கிருஷ்ணன் தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் துரை சாமி, மாவட்ட துணைத்தலைவர் சிற்றம்பலம், மாவட்டப் பொரு ளாளர் கண்ணன், அங்கன்வாடி மாவட்டத் தலைவர் ராஜாமணி உட்பட பலர் உரையாற்றினர்.