districts

img

அறந்தாங்கியில் கோடைகால இலவச கூடைப்பந்து பயிற்சி முகாம்

அறந்தாங்கி, மே 3- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஃபைட்டிங் ஸ்டார்ஸ் கூடை பந்தாட்ட கழகம் 10 ஆம் ஆண்டாக பள்ளி மாணவ, மாணவி களுக்கு இலவச கூடைப்பந்து கோடைகால பயிற்சி முகாமை துவங்கின. அறந்தாங்கி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் துவங்கிய  இந்த முகாம், மே 1 முதல் 45 நாட்கள் நடக் கிறது. இந்த கோடைகால பயிற்சி முகாமை நகர் மன்ற தலைவர் இரா.ஆனந்த் துவக்கி வைத்தார். முதல் நாள் பயிற்சியில் கலந்து கொள்ளும் நூற்றுக்கணக்கான வீரர், வீராங் கனைகளுக்கு பால், முட்டை, நிலக்கடலை வழங்கப்பட்டது.  பைட்டிங் ஸ்டார்ஸ் ஒருங்கிணைப்பா ளர் பா.விஜய் ஆனந்த் தலைமையில் நூற்றுக் கணக்கான வீரர் வீராங்கனைகளுக்கு பைட்டிங் ஸ்டார்ஸ் கூடைப்பந்தாட்ட கழக பயிற்றுநர்கள் பயிற்சி அளிக்கின்றனர். துவக்க விழாவில் அறந்தாங்கி பைட்டிங்  ஸ்டார்ஸ் கூடைப்பந்தாட்ட கழக கௌரவ தலைவர்கள் சேர்மன், விஜயராகவன், தலை வர் சக்திகுமரன், செயலாளர் பாண்டித்துரை,  துணைத்தலைவர் விஜயராஜ், துணைச் செய லாளர் மற்றும் அனைத்து வீரர்-வீராங்கனை களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.  இந்த பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைத்து வீரர்-வீராங்கனைகளுக்கும் அறந் தாங்கி பைட்டிங் ஸ்டார்ஸ் கூடைப்பந்தாட்ட கழகம் சான்றிதழ், விளையாட்டுச் சீருடை கள், பதக்கம் வழங்கப்படும் என்று அறிவித் துள்ளது.