மன்னார்குடி, பிப்.21- ஒன்றுபட்ட தஞ்சாவூர் மாவட்டத்தின் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னோடியும், கோட்டூர் ஒன்றிய ஊராட்சியின் முன்னாள் பெருந்தலைவருமான தோழர் பெ.அருணாசலம் வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அவருக்கு வயது வயது 93. நீண்ட காலம் உடல் நலம் குன்றி இருந்த அவர், சிகிச்சைகள் பலனின்றி திருவாரூர் மருத்துவக் கல்லூரி கல்லூரி மருத்துவமனையில் காலமானார். தோழர் பெ.அருணாச்சலம் சிறுவயது முதலே விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் இயக்கத்தில் ஆர்வமாக பங்கேற்று, கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்து, இறுதி மூச்சுவரை செயல்பட்டு வந்தவர். 1986 மக்களால் நேரடியாக தேர்வு செய்யும் முறையில் கோட்டூர் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவராக தேர்வு செய்யப்பட்டு, மிகச் சிறப்பாக செயல்பட்டவர். பெ. அருணாசலம் இணையர் சில வருடங்களுக்கு முன்பு காலமாகி விட்டார். இவர்களுக்கு 6 மகன்களும், ஒரு மகளும் இருக்கிறார்கள். தகவல் அறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் கோட்டூர் ஒன்றியம், வெங்கத்தான்குடி ஊராட்சியில் உள்ள தோழர் அருணாச்சலம் இல்லத்திற்குச் சென்று, அவரது உடலுக்கு மாலை அணிவித்து, வீரவணக்கம் செலுத்தினார். அப்போது, சிபிஎம் கோட்டூர் ஒன்றியச் செயலாளர் கே. கோவிந்தராஜ் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.