districts

img

சிலம்பத்தில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா

கரூர், ஜூன் 27-

    சிலம்பத்தில் சாதனை படைத்த மாணவ, மாணவி களுக்கு தகுதிநிலை பட்டை  மற்றும் விருது வழங்கும் விழா கரூரில் பெற்றது.

    பாரதம் மார்ஷியல் ஆர்ட்ஸ் சிலம்பம் அகாதெமி யின் 16-ஆவது தகுதி நிலை பட்டை சான்றிதழ் மற்றும் விருது வழங்கும் விழா கரூர் டிஎன்பிஎல் பள்ளியில் கலைச் சுடர்மணி சிலம்ப ஆசான் எஸ்.கிருஷ்ணராஜ் தலைமை வகித்தார்.

    சிலம்பத்தில் பத்து உலகச் சாதனைகள், 18 விருதுகள், அகில இந்திய அளவிலும், மாநில, மாவட்ட  அளவிலும் 22 பதக்கங்கள் வென்று சாதனை படைத்த  புகளூர் கே.ஆனந்தஐயப்ப னின் எட்டு வயது மகன் ஆ. குகன் கார்த்திக்கேஸ்வ ரனை பாராட்டி நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.  

 டி.என்.பி.எல் பள்ளி களின் முதல்வர் முனைவர் வா.மு.அய்யப்பன், ஸ்டார்  மெட்ரிக் பள்ளியின் செயலா ளர் பாஸ்கரன், ஆகியோர் சிறப்புரையாற்றினர். டி.என். பி.எல் மெட்ரிக் பள்ளி துணை  முதல்வர் மா.உமாசந்திரன், தலைமை ஆசிரியர் ச.ஜாக்கு லின் சோபி, மாவட்ட விளை யாட்டு வளர்ச்சிக் கழகத் தலைவர் வீரதிருப்பதி, மோனிக்கா, டி.டி.கார்த்திக், பாரதம் சிலம்பம் பயிற்சிப் பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பாலசுப்பி ரமணியன், கேசவன், கலை வாணி, பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பாரதம் சிலம்பப் பயிற்சி பள்ளி செயலாளர் கே.செளந்த  ரராஜன் நன்றி கூறினார்.