districts

img

புதுக்கோட்டையில் கொடியேற்று நிகழ்ச்சி

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க ஸ்தாபக தினத்தையொட்டி சனிக்கிழமை புதுக்கோட்டையில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. புதுக்கோட்டையில் உள்ள தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கக் கட்டிட வளாகத்தில் சங்கத்தின் கொடியை மாவட்டத் தலைவர் மு.முத்தையா ஏற்றி வைத்தார். மாவட்ட நிர்வாகிகள், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எம்.மகாதீர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.