புதுக்கோட்டை, டிச.7:- முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில், கொடி நாள் வசூலினை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா, வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, படைவீரர் கொடிநாள் 2023 தேநீர் விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, 9 பயனாளி களுக்கு ரூ.2,85,000 மதிப்பிலான திருமண நிதியுதவி, கல்வி உதவித்தொகைகளையும் மற்றும் 2021-இல் அதிக அளவில் நிதி வசூல் புரிந்த அலுவலர்களுக்கு, ஆளுநர், தலைமைச் செயலாளரின் பதக்கம் மற்றும் சான்றிதழினையும் வழங்கினார்.