districts

img

நாகை எம்.பி.யிடம் விவசாயிகள் மனு

திருவாரூர், ஜூன் 20-

    ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜிடம் மனு அளிக்கப்பட்டது.

   மின்சார மசோதா 2022 தாக்கல் செய்துள்ளதை விவாதத்திற்கு பின்பு நிறை வேற்ற வேண்டும். ஆண்- பெண் விவசாயிகள், விவ சாய தொழிலாளர்கள் அனை வருக்கும் ஓய்வூதியம் ரூ.10  ஆயிரம் வழங்க வேண்டும்.  போராட்டக் களத்தில் விவ சாயிகள் மீது போடப்பட்டு நிலுவையில் உள்ள வழக்கு களை திரும்ப பெற வேண்  டும். போராட்டத்தில் உயிர் நீத்த விவசாயிகளுக்கு நினைவு சின்னம் அமைத்திட சிங்கூரில் இடம் ஒதுக்கித் தர வேண்டும் உள்ளிட்ட 7  அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஐக்கிய விவ சாயிகள் முன்னணி சார்பில் மாவட்டம் முழுவதும் விவ சாயிகள், விவசாயத் தொழி லாளர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

     நாடாளுமன்றத்தில் இக்  கோரிக்கைகளை வலி யுறுத்தி குரல் கொடுக்க வேண்  டும் எனக்கோரி அனைத்து  நாடாளுமன்ற உறுப்பினர்  களிடமும் ஐக்கிய விவசாயி கள் முன்னணி சார்பில் மனு அளிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திரு வாரூர் மாவட்ட ஐக்கிய விவ சாயிகள் முன்னணி ஒருங்கி ணைப்பாளர் பி.எஸ்.மாசிலா மணி தலைமையில், எம். சேகர் முன்னிலையில் 30-க்கும் மேற்பட்டோர் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜிடம் மனு வை அளித்தனர்.