districts

திருச்சி முக்கிய செய்திகள்

கண் பரிசோதனை முகாம்

கும்பகோணம், டிச.8 - தஞ்சாவூர் மாவட்ட கண்பார்வை இழப்பு தடுப்பு சங்கம், முருக்கங் குடி அரசு ஆரம்ப  சுகாதார நிலையம்  மற்றும் திருவிடைமரு தூர் ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட திரு நறையூர் ஊராட்சி இணைந்து கண் பரிசோ தனை முகாமை நடத்தின. திருநறையூர் வண் டிப்பேட்டையில் நடை பெற்ற முகாமிற்கு, ஊராட்சி மன்றத் தலை வர் ரமாமணி தலைமை வகித்தார். முகாமை திரு விடைமருதூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சுபா திருநாவுக்கரசு துவக்கி வைத்தார். முகா மில் துணைத் தலைவர் உமாசுரேஷ், ஒன்றியக் குழு உறுப்பினர் ஜெசிமா மன்சூர் மற்றும்  ஊராட்சி மன்ற உறுப்பி னர்கள் கலந்து கொண்ட னர்.  கண்புரை நோயாளி கள் தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்து வமனைக்கு அறுவை சிகிச் சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். முகா மில் ரத்த கொதிப்பு, சர்க்கரை பரிசோதனை செய்யப்பட்டது. மேலும்  சொட்டு மருந்து, மாத்தி ரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

தென்னங்கன்றுகள் நடவு

தஞ்சாவூர், டிச.8 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள வீரியங்கோட்டை கிராமத்தில், பிள்ளை யார் கோயில் குளக் கரையைச் சுற்றிலும், பேராவூரணி கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் சார்பில் நூறு தென்னங்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச் சிக்கு, கோக்கனட் சிட்டி  இன்ஸ்பயர் லயன்ஸ்  சங்கத்தின் தலைவர்  ஏ.எஸ்.ஏ. தெட்சிணா மூர்த்தி தலைமை வகித் தார். வீரியங்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா அய்யப்பன் முன்னிலை வகித்தார். இதில், லயன்ஸ் சங்க சாசனத் தலைவர் எம். நீலகண்டன் உள்ளிட் டோர் கலந்து கொண்ட னர். 

உக்கடையில் மண்வள தினம்

பாபநாசம், டிச.8 - அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்  வளர்ச்சி திட்டத்தின்கீழ், அம்மாபேட்டை வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார் பில் தஞ்சாவூர் மாவட்டம்  உக்கடை கிராமத்தில் உலக மண்வள தினம் நடைபெற்றது.  இதில் வேளாண்மை உதவி இயக்குநர் மோ கன், வேளாண் துணை இயக்குநர் உழவர் பயிற்சி நிலையம் பால  சரஸ்வதி ஆகியோர் பேசி னர். அப்போது, “மண்ணின் முக்கியத் துவம், மண்வள தினம் கடைப்பிடிக்கப்படு வதன் நோக்கம் குறித் தும், பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை தடுப் பதன் மூலம், மண்ணின்  வளத்தை மேம்படுத்த  முடியும். மரக்கன்று களை அதிகளவில் நடு வதன் மூலம் மழையின் அளவை அதிகரித்து, மண் வளத்தை மேம்படுத்த முடியும்” என்றனர்.  முன்னதாக உக்கடை ஊராட்சி மன்றத் தலை வர் வரவேற்றார். பிரியா  நன்றி கூறினார். இதற் கான ஏற்பாடுகளை வேளாண் உதவி அலுவ லர் மாணிக்க வாசகம்,  அட்மா திட்ட அலுவலர் கள் செய்திருந்தனர்.

பயறு வகைகளை சாகுபடி செய்வதால் மண் வளம் பாதுகாக்கப்படுகிறது வேளாண் இணை இயக்குநர் தகவல்

அரியலூர், டிச. 8- பயறு வகைகள் சாகுபடி செய்வதன் மூலம் மண் வளம் பாதுகாக்கப்படுகிறது என்றார் அரியலூர் மாவட்ட வேளாண் இணை  இயக்குநர் மா.பாலையா. அரியலூர் மாவட்டம் பெரியநாகலூர் கிரா மத்தில் பாசிப்பயறு கோ-8 விதைப் பண்ணை  வயலை வியாழக்கிழமை ஆய்வு செய்த  அவர் விவசாயிகளிடம் மேலும் தெரிவித்ததா வது: அதிகளவு காய் பிடிப்பிற்கு 2 சதவீதம்  டி.ஏ.பி கரைசலை பூக்கும் பருவத்தில் தெளிக்க வேண்டும். இந்த டி.ஏ.பி தெளிப்ப தால் பூக்களின் உதிர்வு குறைவதோடு கூடுத லாக 20 சதவீதம் விளைச்சல் பெறலாம்.  வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜன் சத்து கள் வேர்முண்டுகளில் சேகரித்து பயிர்களுக்கு  கொடுக்கிறது. தழைச்சத்திற்காக நைட்ரஜன்  உரம் இடுவதை குறைத்து கொள்ளலாம். ரசாயன உரங்களை குறைத்து கொண்டு  இயற்கையாக கிடைக்கும் கால்நடை கழிவு கள், தாவரக் கழிவுகள், மண்புழு உரங்களை இடுவதன் மூலம் நமது மண், வளமான மண் ணாக மாற்றப்படும். வளமான மண்ணில் அங்ககப் பொருள் இருப்பதால் மண்ணின்  அமைப்பு மேம்படுவதுடன் ஈரப்பதத்தை யும் காற்றோட்ட வசதியையும் தக்கவைத்துக்  கொள்கிறது. இதனால் கார அமிலத் தன்மையை 6.5 முதல் 7.5 வரை சீராக்கி மண்ணை வளமாக்குகிறது. இதனால் பயிர் விளைச்சல் 70 சதவீதம் அதிகரிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆய்வின் போது வேளாண்மை துணை  இயக்குநர் கு.பழனிச்சாமி, உதவி இயக்கு நர் ஆ.சாந்தி, உதவி விதை அலுவலர் மு. கொளஞ்சி, உதவி வேளாண் அலுவலர் ரா. ஸ்ரீதேவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நாச்சியார்கோவில் அரசுப் பள்ளியில் விளையாட்டு மைதானம், ஆய்வகம்  கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: ஆட்சியர்

கும்பகோணம், டிச.8 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகா நாச்சியார்கோயில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 1949 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு 75 வருடங்களை நிறைவு செய்கிறது. இந்நிலையில், இப்பள்ளி மாணவர்கள் தேவையான அடிப்படை வசதிகளின்றி உள்ளனர். இதனால் இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் மற்றும் வளர்ச்சி குழு சார்பில், விளையாட்டு மைதானம், பள்ளிக்கு தேவையான ஆய்வகம், தலை மையாசிரியர் அலுவலக கட்டிடம் கட்டுவ தற்கான உத்தரவை வழங்க வேண்டும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.  அதனடிப்படையில் நாச்சியார்கோவில் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்து, விவரங்களை கேட்டறிந்தார். பின்பு,  “பள்ளி அருகில் உள்ள அரண்மனை சத்தி ரத்திற்கு சொந்தமான அரசு காலியிடத்தை மைதானத்திற்கு வழங்கலாம். ஆய்வகம் மற்றும் தலைமை ஆசிரியர் அறை கட்டு வதற்கு, ‘நமக்கு நாமே’ திட்டத்தின் மூலம் செயல்படுத்தலாம் என ஆலோசித்து, இவற்றை விரைவில் நிறைவேற்ற நடவ டிக்கை எடுக்கப்படும்” என்றார். ஆய்வின்போது கும்பகோணம் தாசில் தார் வெங்கடேஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சுபா திருநாவுக்கரசு, நாச்சி யார்கோவில் திருநறையூர் ஊராட்சி மன்றத்  தலைவர்கள் மற்றும் பள்ளியின் முன்னாள்  மாணவர்கள், வளர்ச்சி குழு பொறுப்பா ளர்கள் கலந்து கொண்டனர்.

தற்காப்பு கலை பயிற்சி துவக்கம்

தஞ்சாவூர், டிச.8-  தஞ்சாவூர் மாவட்டம் ஒட்டங்காடு பஞ்சாயத்துக் குட்பட்ட பெரிய தெற்குக்காடு நடுநிலைப் பள்ளியில், பள்ளி கல்வித்துறையின் சார்பில், 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கான தற்காப்பு கலை பயிற்சி வகுப்பு துவங்கியது. பயிற்சியை, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவ லர் கு.திராவிடச் செல்வம் துவக்கி வைத்து, மாணவர் களுக்கு தற்காப்பு கலையின் அவசியம் குறித்து கூறி னார். வட்டார கல்வி அலுவலர்கள்  அ.அங்கயர்கண்ணி, கா.கலா ராணி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் அ. முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  நிகழ்ச்சியில் ஒட்டங்காடு ஒன்றியக் குழு உறுப்பி னர் பாக்கியம் முத்துவேல், பள்ளி தலைமை ஆசிரியை  ஆர்.வீரம்மாள், ஆசிரியர் பயிற்றுநர் அ.ரா.சரவணன்,  பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் மற்றும் உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். மாணவிகளுக்கான தற்காப்புக் கலை பயிற்சியை பயிற்சியாளர் ஜூடோ பாண்டியன் வழங்கினார்.

 

பொதுப் பாதையை மீட்க கோரிக்கை
திருச்சிராப்பள்ளி, டிச.8 - திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் பெட்ட வாய்த்தலை தேவஸ்தானம் எல்லக்கரை பகுதியில் உள்ள வண்டிப்பாதை புறம்போக்கு இடம் உள்ளது. இதனை கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆர் 800 சொசைட்டி பால் கறவை நிலையத்திற்கு செல்ல, பால்  உற்பத்தியாளர்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த வண்டிப்பாதை புறம்போக்கை சிலர்  ஆக்கிரமித்துள்ளனர். ஆக்கிரமிப்பாளர்கள் மீது நட வடிக்கை எடுத்து வண்டிப்பாதையை பொதுமக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அந்த இடத்தில் சுற்றுச்சுவர், மேற்கூரை அமைத்து தர வேண்டும் என வலி யுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு  பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட் டத்தை விளக்கி ஒன்றிய கமிட்டி உறுப்பினர் முருகன், கிளைச் செயலாளர்கள் ரெங்கநாதன், கோகுல், விவசா யத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் தங்க துரை, மாவட்டத் துணைத் தலைவர் செல்வராஜ், ஜோதி முருகன் ஆகியோர் பேசினர். 

ஆற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் கேரள தம்பதி பலி

திருச்சிராப்பள்ளி, டிச.8 - கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கூட புடாவைச் சேர்ந்தவர் ஸ்ரீநாத். இவர் தனது மனைவியுடன்  வெள்ளியன்று அதிகாலை திருச்சி விமான நிலையத் தில் இருந்து சென்னை நோக்கி காரில் சென்று கொண் டிருந்தார். ஸ்ரீரங்கம் - சமயபுரம் டோல்கேட்டை இணைக்கும் வகையில் உள்ள கொள்ளிடம் பாலத்தில் கார் வேகமாக சென்று கொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், பாலத்தின் வலது பக்க தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு ஆற்றில் பாய்ந்தது. இதில் கார் முற்றிலுமாக சேதமடைந்தது. காரில் பயணித்த ஸ்ரீநாத் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு  வந்து, அவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக் காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இன்று குறைதீர் கூட்டம்

அரியலூர், டிச.8 - உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாது காப்பு துறை சார்பில், அரியலூர் வட்டம் ஒட்டக்கோ வில், உடையார்பாளையம் வட்டம் தா.பழூர், செந்துறை  வட்டம் செந்துறை, ஆண்டிமடம் வட்டம் திருக்குளப்பூர் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (டிச.9) அன்று பொது  விநியோக குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.  வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னிலையில் நடை பெறும் இக்கூட்டத்தில், பொதுமக்கள் நியாயவிலைக் கடைகள் தொடர்பான குறைகளைத் தெரிவித்தும், மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம்,  முகவரி மாற்றம் உள்ளிட்டவை மற்றும் தனியார் சந்தை யில் விற்கப்படும் பொருள்கள், சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை தெரிவிக்கலாம் என்று மாவட்ட  வருவாய் அலுவலர் ம.ச.கலைவாணி தெரிவித்துள்ளார்.

வீடு கட்ட மானியம் வழங்க வேண்டும் தையல் தொழிலாளர்கள் கோரிக்கை

பொன்னமராவதி, டிச.8 - தையல் தொழிலா ளர்கள் சங்கத்தின் புதுக் கோட்டை மாவட்டம் பொன் னமராவதி கிளை புதிதாக  துவங்கப்பட்டது. பொன்ன மராவதியில் நடந்த கூட்டத் திற்கு, சிஐடியு ஒன்றியச் செயலாளர் தீன் தலைமை வகித்தார். சங்க பொதுச் செயலாளர் மாரிக்கண்ணு, சிஐடியு மாவட்ட தலை வர் முகமதலி ஜின்னா ஆகி யோர் சிறப்புரையாற்றினர்.  கிளையின் புதிய தலை வராக மதியரசி, செயலாள ராக லட்சுமி, பொருளாளராக தேவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  தையல் தொழிலா ளர்களுக்கு இலவச மின்சா ரம், வங்கி கடனுதவி, தையல் மகளிர் கூட்டுறவு சங்கத்தில் புதிய உறுப்பி னர்களை சேர்க்க நடவ டிக்கை, கட்டுமானத் தொழி லாளர்களுக்கு நல வாரி யத்தில் வழங்கப்படுவது போல், தையல் தொழிலா ளர்களுக்கும் வீடு கட்ட மானியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.பொன்னமராவதி, டிச.8 - தையல் தொழிலா ளர்கள் சங்கத்தின் புதுக் கோட்டை மாவட்டம் பொன் னமராவதி கிளை புதிதாக  துவங்கப்பட்டது. பொன்ன மராவதியில் நடந்த கூட்டத் திற்கு, சிஐடியு ஒன்றியச் செயலாளர் தீன் தலைமை வகித்தார். சங்க பொதுச் செயலாளர் மாரிக்கண்ணு, சிஐடியு மாவட்ட தலை வர் முகமதலி ஜின்னா ஆகி யோர் சிறப்புரையாற்றினர்.  கிளையின் புதிய தலை வராக மதியரசி, செயலாள ராக லட்சுமி, பொருளாளராக தேவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  தையல் தொழிலா ளர்களுக்கு இலவச மின்சா ரம், வங்கி கடனுதவி, தையல் மகளிர் கூட்டுறவு சங்கத்தில் புதிய உறுப்பி னர்களை சேர்க்க நடவ டிக்கை, கட்டுமானத் தொழி லாளர்களுக்கு நல வாரி யத்தில் வழங்கப்படுவது போல், தையல் தொழிலா ளர்களுக்கும் வீடு கட்ட மானியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கருணை அடிப்படையில் பணி வழங்கக் கோரிக்கை

தஞ்சாவூர், டிச.8 - கருணை அடிப்படையில் வருவாய் கிராம ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும். வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கி அரசு ஊழியர் டி பிரிவில் இணைக்க வேண்டும். மாற்றுத்திறனாளி வருவாய் கிராம ஊழியர்களுக்கு எரிபொருள் படி வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாட்சியர் அலுவலக வாயிலில் நடைபெற்ற போராட்டத்தில், சங்கத் தலைவர் கமலஹாசன், செயலாளர் சத்யா, பொருளாளர் அம்பிகா, மாவட்ட துணை தலைவர் விஜயகுமார் மற்றும் 18 பெண்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட வருவாய் கிராம ஊழியர்கள் கலந்து கொண்டனர்.  பொன்னமராவதி புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் ஐயப்பன் தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் விஜயா, மாவட்ட இணைச் செயலாளர் சின்னத்துரை, மாநில செயற்குழு உறுப்பினர்கள், சங்கத்தின் வட்ட துணைத் தலைவர் சேவுக காமராசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். அரியலூர் அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு சங்கத்தின் வட்டத் தலைவர் காமராஜ் தலைமை வகித்தார்.