districts

img

மறுபயன்பாட்டு பொருட்கள் கண்காட்சி: அரசுப்பள்ளி மாணவர்கள் அசத்தல்

மயிலாடுதுறை, நவ.30-  மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வீணாகும் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்க ளிலிருந்து மாணவர்கள் உருவாக்கிய மறு பயன்பாட்டு அறிவியல் கண்காட்சி புத னன்று நடைபெற்றது.  மயிலாடுதுறை மாவட்ட கல்வித்துறை யும், அமெரிக்கன் இந்தியா பவுண்டேசன் என்ற நிறுவனமும் இணைந்து நடத்திய  இக்கண்காட்சி அரங்கினை செம்பனார் கோவில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர் திறந்து வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா, வட்டாரக்  கல்வி அலுவலர் பூவராகவன், ஊராட்சி மன்ற தலைவர் ஏ.ஆர்.சந்திரமோகன், ஒன்றிய கவுன்சிலர் சாந்தி, பள்ளி தலைமை யாசிரியர் சித்ரா, ஊராட்சி துணைத்தலை வர் சிங்காரவேலு, அமெரிக்கன் இந்தியா பவுண்டேசன் ஒருங்கிணைப்பாளர் அலெக்  சாண்டர் ஆகியோர் கண்காட்சியினை பார்  வையிட்டு மாணவர்களிடம் வடிவமைப்பு கள் குறித்து கேட்டறிந்தனர்.  அமெரிக்கன் இந்தியா பவுண்டேசன் நிறுவனம் மயிலாடுதுறை மாவட்டத்தில் 55 அரசு நடுநிலைப்பள்ளிகளை தேர்வு செய்து, டிஜிட்டல் ஈகுவலைசர் என்கிற திட்டத்தின் கீழ், ‘‘சப்போர்ட் மை ஸ்கூல் மிஷன் ரீசைக்லிங்’’ என்ற தலைப்பில் 150-க்கும் மேற்பட்ட படைப்புகளை மாண வர்கள் காட்சிக்கு வைத்திருந்தனர்.  இதில் சிறந்த 11 படைப்புகளுக்கு பரிசு, கேடயம் மற்றும் சான்றிதழ்களையும், 29 படைப்புகளுக்கு ஆறுதல் பரிசுகளும், சிறந்த பள்ளிக்கான விருதும் அமெரிக்கன் இந்தியா பவுண்டேசன் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது.

;