districts

img

பள்ளி, கல்லூரி, பல்கலை., ஊராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா

அரியலூர், ஜன.11 - அரியலூர் அடுத்த தாமரைக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில், அவ்வூராட்சி நிர்வாகம் சார்பில் சமத்துவப் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு ஊராட்சித் தலைவர் பிரேம்குமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கவிதாமுருகேசன், வார்டு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள்,மாணவ,மாணவியர்கள்,பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இதனைத் தொடர்ந்து, அங்குள்ள ஏரிக்கரையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பனை மரம் நடப்பட்டது. முன்னதாக அனைவரும் போகிப் பண்டிகை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

பாலிடெக்னிக் கல்லூரி 

 புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில்  பொங்கல் வைத்து கொண்டாடினர். இந்நிகழ்வில் சுற்றுச்சூழல் பாதுகாவலர்   கல்லூரி முதல்வர் ச. குமார்,  முன்னாள் மாணவரும் பொறியாளர்  மத்திய உளவுத் துறையில் பணியாற்றும்  வி.முத்துக்குமார் ஆகியோர் உரையாற்றினர்.   விழாவில் முன்னாள் மாணவர்கள், ராணியம்மாள் நாட்டியாலயா பள்ளி நிறுவனர் பொறியாளர் சரவணன், அன்ன காமு கன்ஸ்ட்ரக்சன் பொறியாளர் சரவணன், கல்லூரி துறை பேராசிரியர்கள், ஊழியர்கள், பொதுமக்கள், மாணவர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினர்.

தமிழ்ப் பல்கலை.,

தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், துணைவேந்தர்  வி.திருவள்ளுவன் தலைமையில், சமத்துவப் பொங்கல் திருவிழா கரிகாற்சோழன் கலையரங்கில் நடைபெற்றது.  திரைப்பட இயக்குநர் மு.களஞ்சியம் பேசினார்.   . தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பேராசிரியர் பெ.இளையாப்பிள்ளை முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இளையராஜா  வரவேற்றார். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், நாட்டுப்புறப் பாடல்கள், கோலப்போட்டிகள் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.    போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள், பரிசுகளை துணைவேந்தர் வழங்கினார்.   இணைப்பேராசிரியர் ஆ.துளசேந்திரன் நன்றி கூறினார்.

பொன்னாங்கண்ணிக்காடு