districts

img

கூகூர் பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், ஜூன் 19-

     தஞ்சை மாவட்டம் கும்ப கோணம் அருகே உள்ள கூகூர் ஊராட்சியில் பாசன  வாய்க்கால் வடிகால் வாய்க்கால்களின் ஆக்கிர மிப்பை அகற்றாததை கண் டித்து திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில்  கூகூர் கடைவீதியில் கவன  ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

     ஆர்ப்பாட்டத்திற்கு சங்  கத்தின் ஒன்றியச் செயலா ளர் கு.முருகன் தலைமை  வகித்தார். ஆரோக்கிய தாஸ், ஜெயராஜ், சுந்தர மூர்த்தி, ரவிச்சந்திரன், சண்  முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஎம் திரு விடைமருதூர் தெற்கு ஒன்றி யச் செயலாளர் பழனிவேல் துவக்கி வைத்தார்.

    ஆர்ப்பாட்டத்தில், கூகூர் ஊராட்சியில் பாசன வாய்க்  கால் வடிகால் வாய்க்கால் களை சில நபர்கள் ஆக்கிர மித்துள்ளதை அரசின் கவ னத்திற்கு பலமுறை மனுக்  கள் மூலமாக அளித்தும் இது நாள் வரை எந்த நடவடிக்கை யும் எடுக்காவில்லை என கூறினர்.