districts

ஆடலூரில் யானைகள் நடமாட்டம்

திண்டுக்கல், ஆக.21-

       திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலைப் பகுதிகளான ஆடலூர் பகுதியில் தற்போது இரவு  நேரங்களில் 2 யானைகளின் தொல்லை அதிகரித்து உள்ளது. கடந்த சில தினங் களாக ஆடலூர் அருகே  குப்பம்மாபட்டி மெயின் ரோடு, சோலைக்காடு, கே.சி.பட்டி பகுதிகளில் இரட்டை யானைகள் வலம் வருகின்றன. இதன் காரணமாக  மக்கள் மாலை 3 மணிக்கே  வீடுகளுக்கு வந்துவிடுகிறார் கள். பிற்பகல் 3 மணி அள வில் யானைகள் சாலை யில் நடமாடத் தொடங்கி விடுகிறது. இது தொடர் பாக இப்பகுதி மக்கள் வனத்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளனர். இரவு நேரத்தில் சாலை களில் சுற்றித்திரியும் யானை களை கட்டுப்படுத்த நட வடிக்கை எடுக்க அரசும் வனத் துறை அதிகாரிகளும் முன் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.