பொன்னமராவதி, ஜூலை 29 -
புதுக்கோட்டை மாவட் டம் பொன்னமராவதி அருகே உள்ள மணப் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (78). இவர் சனிக்கிழமை காலை மின் விநியோ கத்தை நிறுத்தாமலேயே பியூஸ் போடுவதற்காக மின்மாற்றி மீது ஏறி யுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடலை கைப்பற்றிய பொன்னம ராவதி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து உடற்கூராய்வுக்காக வலையபட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.