கரூர் வெண்ணமலையில் உள்ள கரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தீபாவளி கதர் சிறப்பு விற்பனை துவக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு கரூர் கதர் கிராம தொழில்கள் உதவி இயக்குநர் கோபால கிருஷ்ணன் தலைமை வகித்தார். கரூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பாலமுருகன் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கதர் விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.